அஹமதாபாத்தில் இடம்பெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவன்கா டிரம்ப் பிரமிக்கவைத்த நிகழ்ச்சி என வர்ணித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதியை கௌரவிக்கும் விதத்தில் அஹமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சி இன்று இடம்பெற்றது.

இந்திய ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின்போது இடம்பெற்ற ஹெவ்டி மோடி நிகழ்வை பின்பற்றி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதத்தில் கலாச்சார நிகழ்வுகள் இன்றைய நிகழ்வில் இடம்பெற்றன.

தனது உரையை நமஸ்தே என ஆரம்பித்த டிரம்ப் இந்தியாவை பெரிதும் பாராட்டினார்.

அமெரிக்கா என்றும் இந்தியாவின் நம்பகதன்மை மிக்க விசுவாசமான நண்பனாக விளங்கும் என தெரிவித்த டிரம்ப் அமெரிக்கா இந்தியாவை நேசிக்கின்றது,மதிக்கின்றது என குறிப்பிட்டார்.

ஐந்து மாதங்களிற்கு முன்னர் இந்திய மிகப்பெரும் பிரதமரை அமெரிக்கா மிகப்பிரமாண்டமான உதைபந்தாட்ட மைதானத்தில் வரவேற்றது,இன்று என்னை இந்தியா மிகப்பெரும் மைதானத்தில் வரவேற்றது என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் இவன்கா டிரம்ப் தனது கணவர் ஜரெட் குஸ்னெருடன் கலந்துகொண்டிருந்தார்.

இவான்கா இந்த நிகழ்வின்போது பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

நமஸ்தே டிரம்ப் நிகழ்வை இவன்கா கண்ணிற்கு விருந்தளித்த பிரமிக்கவைத்த நிகழ்ச்சி என தெரிவித்துள்ளார்.