(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஆய்வு மற்றும் தகவல்களைத் திரட்டுவது தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்துக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று பாராளுமன்றத்தில் கைச்சாத்திடப்பட்டது.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோர் இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கடந்த பத்து வருடங்களில் அரசாங்கப் பல்கலைக்கழகங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆய்வு முடிவுகளை பாராளுமன்றத்தின் ஊடாக அணுகுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வில் பிரதி செயலாளர் நாயகமும், பதவியணி தலைமையதிபதியுமான நீல் இத்தவெல, உதவி செயலாளர் நாயகங்களான குஷானி ரோஹன தீர, ரிக்கிரி ஜயதிலக உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.