ஓமந்தை பஸ் - வேன் மோதி கோர விபத்து ; தீக்கான காரணத்தை கண்டறிய அரச இரசாயன பகுப்பாய்வாளரின் உதவி 

Published By: Vishnu

24 Feb, 2020 | 09:13 PM
image

( எம்.எப்.எம்.பஸீர், ஓமந்தை நிருபர் )

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணிகள் பஸ்வண்டியும், ஜீப் வண்டியொன்றும் நேருக்கு நேர் விபத்துக்குள்ளானதையடுத்து ஏற்பட்ட தீ பரவல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விபத்துக்கு முகம்கொடுத்த இரு வாகங்களும் டீசல் எஞ்சின் வாகங்கள் என்பதைக் கருத்தில் கொண்டும், விபத்தின் பின்னர் சுமார் 15 நிமிடங்களின் பின்னர் தீ பரவியமை தொடர்பிலும் கருத்தில் கொண்டு தீக்கான காரணத்தை கண்டறிய அரச இரசாயன பகுப்பயவாளரின் உதவி பெறப்படவுள்ளது. 

இதற்கான அரிவித்தலை இன்று ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரி பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த தீ பரவும் போது, அவ்விடத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவரும் இருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரது வாக்கு மூலமும் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளான. 

அதன்படி இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், அதனையடுத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் பரவிய தீயால் ஜீப் வண்டி சாரதி உடல் கருகி உயிரிழந்துள்ளார். அதன்படி, விபத்து, தீபரவல் இரண்டினாலும் மொத்தமாக ஐவர் உயிரிழந்துள்ளனர்.  

நேற்று இரவு 7.15 மணியளவில் பதிவான இந்த கோர விபத்தில்  உயிரிழந்தோர் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் என்பதுடன், உடல் கருகி உயிரிழந்த சாரதியும் அவர்களது உறவுக்கார நபர் என்பது தெரியவந்துள்ளது.   

இந் நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 21 பேர் வவுனிய,, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து பருத்தித்துறைநோக்கி பயணித்த  இ .போ. ச. பஸ் வண்டி  வவுனியாவில் பயணிகளை ஏற்றியவாறு  ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பயணித்த பாதை ஒழுங்கைக்குள் சென்று  பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:51:38
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59