இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு, தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக ஆக்ராவுக்கு சென்றுள்ளார்.

ஆக்ரா விமான நிலையத்தை வந்தடைந்த  டிரம்ப் மற்றும் அவரது பாரியாரான மெலனியா டிரம்ப் உள்ளிட்டோரை  உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

வரவேற்பின் பின்னர் டிரம்பும், மெலானியாவும் தாஜ்மஹாலுக்கு சென்று பார்வையிட்டனர். அங்குள்ள வருகைப்பதிவு புத்தகத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டதுடன் தாஜ்மஹால் முன்பு டிரம்ப் தனது மனைவியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

Photo credit : Twitter