(எம்.எப்.எம்.பஸீர்)

நகர் பிராந்தியங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும், முகாமைத்துவம் செய்யும் பணிகளில், போக்குவரத்து பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

முதல் கட்டமாக இன்று கொழும்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இடங்களில் இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் இந் நடவடிக்கை முழு கொழும்பு நகருக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது. 

பின்னர் அந்த வேலைத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க ஏனைய நகரங்களிலும் இந்  பொலிஸாரின் உதவிக்கு இராணுவ பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  இரானுவ தகவல்கள் தெரிவித்தன.