மிலேனியம் சேலன்ச் கோர்பரேஷன் (எம். சி. சி.) ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் கையளித்தார். ஜனாதிபதியிடம் முதற்கட்ட அறிக்கை கடந் த 17ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு  2019 டிசெம்பர்  மாதம் 18ம் திகதி அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் ஜனவரி மாதம் 01ம் திகதியில் இருந்து செயற்பாட்டிற்கு வரும் வகையில்   விசேட துறைசார் நிபுணர்கள் நால்வரை உள்ளடக்கிய குழு  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பிரிவு பேராசிரியர் லலிதசிறி  குணருவன் குழுவின் தலைவராகவும், போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.  ஜயவீர , ஜனாதிபதி சட்டத்தரணி  நிஹால்  ஜயவர்தன, மற்றும் பட்டய கட்டிடக் கட்டிடக் கலைஞர்  நாலக ஜயவீர ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக உள்ளடங்குகின்றனர்.