பான் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் ‍ேகுறைப்பதற்கான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜெயவர்தன தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பலன்களை பொது மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறைக்கப்படவிருக்கும் விலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை கலந்துரையாடலின் பின்னர்  விலை தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும், எனவும் கட்டாயம் வெதுப்பக பொருட்களின் விலைகளை குறைக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.