சஜித்தின் முதல் தீர்மானமே மக்கள் விரோத தீர்மானமாகும்! - டியூ குணசேகர

Published By: Vishnu

24 Feb, 2020 | 05:32 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கடன் எல்லையை அதிகரிக்க எதிர்க்கட்சி ஆதரவளிக்காதமை மக்கள் விரோத தீர்மானமாகும். வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் இவ்வாறு செயற்பட்டதில்லை என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் அந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல கடந்த அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட நிதி சில சந்தர்ப்பங்களில் போதாமல் இருக்கலாம். 

அவ்வாறான கட்டங்களில் இடைக்கால கணக்கறிக்கையொன்றை சமர்ப்பித்து அதனை பாராளுமன்றத்தில் சம்மதித்துக்கொள்வார்கள். அதுதான் பாராளுமன்ற சம்பிரதாயம். கடந்த 1947 ‍ெஆண்டில் இருந்து அனைத்து அரசாங்கங்களும் இந்த முறையையே பின்பற்றிவருகின்றன.

ஆனால் கடந்த வியாழக்கிழமை ஆட்சிக்குவந்த புதிய அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருந்த கணக்கறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் ஆதரவளிக்க மறுத்துள்ளனர். 

அதனால் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமலே அதனை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மேற்கொண்ட முதலாவது தீர்மானம் மக்கள் விரோத தீர்மானமாகும் என்று சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43