இந்தியாவின் பஞ்சாபில் இடம்பெற்ற மைக்ரோ லைட் சிறிய ரக விமான விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு விமானத்தில் இருந்த இரு என்.சி.சி கடேட்ஸ் (NCC cadets ) இருவர் காயமடைந்துள்ளன நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாட்டியாலா ஏயியேஷன் கிளம் விமான நிலையத்திலிருந்து இன்று காலை 11.30 மணியளவில் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்தோடு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார்  தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image Help : yahoo news