மலை­ய­கத்தில் பல கட்­சிகள், தொழிற்­சங்­கங்கள் இருக்­கின்­றன. அனைத்­துமே தொழி­லாளர் நலன் தொடர்­பி­லேயே அக்­கறை காட்­டு­கின்­றன. தொழி­லா­ளர்­களின் உரி­மைக்­காக நீண்ட கால­மாக குரல் கொடுத்து வரும் தொழிற்­சங்­க­மாக இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் இருக்­கின்­றது. அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்டு தொழி­லா­ளர்­களின் நலன்­களில் பல திட்­டங்­களை முன்­னெ­டுக்கக் கூடிய அமைப்­பாக ட்ரஸ்ட் நிறு­வனம் விளங்­கு­கி­றது. இதன் மூலம் பல விட­யங்­களை முன்­னெ­டுக்­கலாம். எனினும் அவ்­வா­றான விட­யங்­களில் கட்சி தொழிற்­சங்க பேத­மில்­லாது தொழி­லாளர் நலனே பார்க்­கப்­படல் வேண்டும். எனினும் மலை­ய­கத்தில் அது தலை­கீ­ழாக உள்­ளது.

எல்லா விட­யத்­திலும் எதிர்ப்பு அர­சி­யலை செய்ய வேண்டும் என்றால் இறு­தியில் பாதிக்­கப்­ப­டப்­போ­வது தொழி­லா­ளர்­களே. இதை ஏனைய தொழிற்­சங்­கங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ட்ரஸ்ட் நிறு­வ­னத்தின் புதிய பணிப்­பா­ள­ராக பொறுப்­பேற்­றுள்ள அருள்­சாமி பரத் தெரி­விக்­கிறார். நிறு­வ­னத்தின் செயற்­பா­டுகள் மற்றும் பெருந்­தோட்ட சமூ­கத்தின் தற்­போ­தைய நிலைமை குறித்து வீர­கே­சரிக்கு அவர் வழங்­கிய செவ்­வியின் விபரம் வரு­மாறு:

கேள்வி: தொழிற்­சங்­க­வா­தியின் வாரிசு என்ற அடிப்­ப­டையில் ட்ரஸ்ட் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக சிலர் தெரி­விக்­கின்­ற­னரே?

பதில்: அப்­ப­டித்தான் கூறு­வார்கள். ஏனென்றால் இந்த பொறுப்­புக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள இளம் வய­து­டை­யவன் நான். மட்­டு­மன்றி  இதன் சேவைகள் ,பொறுப்­பு­க­ளைப்­பற்றி அறிந்­தி­ராத ஒருவன் என்றால் அவர்கள் கூறு­வது நியா­ய­மாக இருக்­கலாம். எனது தந்தை அமரர் அருள்­சா­மியின் தொழிற்­சங்க பணிகள், அனு­ப­வங்­க­ளைப்­பற்றி நான் ஒன்றும் கூறத்­தே­வை­யில்லை. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அமைப்பின் பணிப்­பாளர் சபை உறுப்­பி­ன­ராக அவர் இருந்த வேளை நான் அவ­ர­ருகில் இருந்து இந்த அமைப்பின் சகல செயற்­பா­டு­க­ளையும் அறிந்து கொண்டேன். அடுத்­த­தாக நான் ஒரு சட்­டத்­த­ரணி. இதன் சட்ட நுணுக்­கங்கள் ,நகர்­வுகள் பற்றி இல­கு­வாக கற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது. இவை எல்­லா­வற்­றையும் விட என் மீது இ.தொ.கா தலை­வரும் அமைச்­ச­ரு­மான  ஆறு­முகன் தொண்­ட மான் வைத்­தி­ருந்த நம்­பிக்கை என்னை இன்னும் தெம்­பூட்­டி­யது. ஆகவே இப்­பொ­றுப்பை ஏற்று பல விட­யங்­களை செயற்­ப­டுத்தி வரு­கின்றேன்.

கேள்வி: உங்­க­ளது தந்தை சிரேஷ்ட தொழிற்­சங்­க­வா­தி­யாக மிளிர்ந்­தவர் உங்­க­ளுக்­குள்ள தொழிற்­சங்க அனு­ப­வங்கள் எப்­ப­டி­யா­னவை?

பதில்: நான் எனது தந்­தையின் அரு­கி­லி­ருந்தே பல நுணுக்­கங்­களை கற்றேன். ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்­பாக  இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் எனக்கு சில பொறுப்­பு­களை வழங்­கி­யி­ருந்தார். அதா­வது தோட்ட முகா­மை­யா­ளர்கள் கம்­பனி அதி­கா­ரி­க­ளு­ட­னான சந்­திப்பை ஏற்­பாடு செய்­யும்­படி கேட்டார். பொது­வாக தோட்ட முகா­மை­யாளர் சந்­திப்பு என்றால் 50 தொடக்கம் 60 பேரே கலந்து கொள்வர் . ஆனால் நான் எனது அணு­கு­மு­றை­களின் மூலம் இரண்டு சந்­தர்ப்­பங்­களில் 200 முகா­மை­யா­ளர்­களை ஓரி­டத்தில் திரட்­டினேன். அதில் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரிகள் ஐவரும் அடக்கம். இந்த அணு­கு­முறை தலை­வ­ருக்கு பிடித்­தி­ருந்­தது. ஆகவே தோட்ட முகா­மை­யா­ளர்­க­ளுடன் நெருக்­கத்தை பேணும் ஒரு­வ­ருக்கு தலை­மைத்­துவ பண்­புகள் இருப்­பதை அறிந்தே என்னை இத்­து­றைக்குள் செயற்­பட வைத்தார். தந்­தையின் மறை­வுக்குப் பின்னர் என்னால் முழு­மை­யாக இதில் ஈடு­பட முடிந்­தது.

கேள்வி: ட்ரஸ்ட் நிறு­வ­னத்தின் மூலம் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டுகள் எவை?

பதில்:  முக்­கி­ய­மாக கட்­டு­மானப் பணிகள், சுகா­தார சேவையை மேம்­ப­டுத்தல் மற்றும் சுய­தொ­ழில்­களை ஊக்­கு­வித்தல் உள்­ளிட்ட பணி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இதற்கு பிராந்­திய பெருந்­தோட்ட கம்­ப­னிகள்  வழங்கும் நிதி,  அமைச்­சுக்­களின் ஊடாக கிடைக்கப் பெறும்  நிதிகள்  சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் ,அமைப்­புகள் ஊடாக கிடைக்கும் நிதிகள்    போன்­ற­வற்­றா­லேயே இந்­நி­று­வனம் இயங்­கு­கின்­றது. இந்­நி­லையில் கடந்த சில வரு­டங்­க­ளா­கவே கம்­ப­னி­க­ளி­ட­மி­ருந்து கிடைக்க வேண்­டிய சுமார் 300 மில்­லியன் ரூபா நிதி வசூ­லிக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. நான்  இந்­நி­று­வ­னத்தை பொறுப்­பெ­டுத்­துள்­ள­தென்­பது, ஒரு மூழ்கும் நிலை­யி­லுள்ள கப்­பலை மீட்­டெ­டுக்கும் செய­லாகும்.  இந்­நி­லை­யி­லேயே தற்­போ­தைய அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளுக்­கான திட்­ட­மி­டல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கேள்வி: தோட்­டப்­பு­றங்­களில்  வேலை நாட்கள் குறைக்­கப்­ப­டு­கின்­றன  என்ற குற்­றச்­சாட்­டொன்று  எழுந்­துள்­ளதே ?

பதில்: இந்­த­ பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான அதி­காரம் ட்ரஸ்­டிடம்  கிடை­யாது ஆனால் இந்த விடயம் தொடர்பில் தொழிற்­சங்க ரீதியில் எமக்கு பல்­வேறு முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன.

 கூட்டு ஒப்­பந்­தத்தின் பிர­காரம் ஞாயிறு அல்­லது போயா  தினங்­களில் தொழி­லா­ளர்கள் வேலைக்­கு­ சென்றால் அவர்­க­ளுக்கு ஒன்­றரை நாள் கொடுப்­ப­ன­வுகள் வழங்க வேண்டும். இது கூட்டு ஒப்­பந்­தத்தில் உள்ள ஒரு முக்­கி­ய­மான சரத்து.  இதனை தவிர்ப்­ப­தற்­காக  சில கம்­ப­னிகள் குறித்த நாட்­களில் வேலை வழங்­கு­வதை தவிர்க்­கின்­றன. அதேபோல் உற்­பத்தி  குறைவு என்ற பெயரில் திட்­ட­மிட்­ட­படி வேலை­களை கொடுப்­பதை தவிர்த்­து­வ­ரு­கின்­றன. இதி­லுள்ள முக்­கிய பிரச்­சினை என்­ன­வென்றால் எமது தொழிற்­சங்கம் ஒரு விட­யத்தை தீர்­வாக கொண்டு வர முடிவு செய்தால் எதி­ரணி தொழிற்­சங்­கங்கள் அதற்கு  எதிர்ப்பு தெரி­வித்து வேண்டாம் என பிர­சாரம் செய்­கின்­றன.  உதா­ர­ண­மாக டிஜிட்டல் தராசு விவ­கா­ரத்தை எடுத்­துக்­கொண்டால் ஆரம்­பத்தில் அதனை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வுடன் இது கம்­ப­னி­க­ளுக்கு சார்­பான விடயம் என வாதா­டினர். சில நடை­முறை பிரச்­சி­னைகள் கார­ண­மாக அம்­மு­றையை மாற்றி மீண்டும் பழைய முறையில் அளவை செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில் தற்­போது டிஜிட்டல் தரா­சுகள் வேண்­டு­மென பிர­சாரம் செய்­கின்­றனர்.  இவ்­வா­றான முரண்­பாட்டு கருத்­துக்­க­ளா­லேயே  ஒரு ஆக்­க­பூர்­வ­மான செயற்­திட்­டத்­தையோ தீர்­வையோ முன்­னெ­டுக்க முடி­யா­துள்­ளது.  

கேள்வி: ட்ரஸ்ட் பணிப்­பா­ள­ராக நீங்கள் தெரி­வு­செய்­யப்­பட்ட  பின்  உங்­களால்  பிர­தா­ன­மாக முன்­னெ­டுக்­கப்­படும் திட்­டங்கள் எவை ?

பதில்: நான் தலை­மைத்­துவ பொறுப்பை ஏற்ற பிறகு முக்­கி­ய­மாக சுகா­தா­ர­துறை அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­பதில் அதிக கவ­னத்தை செலுத்­தி­வ­ரு­கின்றேன். காரணம் மலை­ய­கத்தில் தற்­போது அதி­க­ள­வான இரும்­புச்­சத்து குறை­பா­டுகள் இருப்­ப­தாக ஆய்­வுகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.  ஆகவே  பல்­வேறு மட்­டங்­களில் சத்­து­ணவு மற்றும் விழிப்­பு­ணர்வு திட்­டங்­க­ளி­னு­டாக இரும்புச் சத்து

குறை­பாட்டை நிவர்த்­திப்­ப­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னி­லை­ப­டுத்தி செயற்­பட்டு வரு­கின்றேன். இத­னூ­டாக இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்கும் பணியும்  முன்­னெ­டுக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அத்­தோடு குழந்­தைகள் பரா­ம­ரிப்பு நிலைய உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான டிப்­ளோமா சான்­றி­தழ்கள் வழங்கும் செயற்­பா­டுகள் ஆரம்பம் முதல் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த நிலையில் தற்­போது உலக வங்­கியின் நிதி உத­வி­யுடன் இல­வ­ச­மாக இவற்றை முன்­னெ­டுக்க வழி­வ­குத்து வரு­கிறோம். அத்­தோடு தொழி­லா­ளர்­க­ளுக்­கான சுகா­தா­ர­மான தொழில் சூழலை உரு­வாக்­கவும்  திட்­ட­மிட்­டு­வ­ரு­கின்றோம்.

கேள்வி: பெருந்­தோட்டப் பகு­தி­களில் பாது­காப்­பாகத் தொழில் புரியும் சூழல் தற்­போது உள்­ளதா?   குள­விக்­கொட்டு சம்­ப­வங்கள் விலங்­கு­களால் தொழி­லா­ளர்கள் தாக்­கப்­படல் அதி­க­ரித்­துள்­ளதே?

பதில்: ஆம் ,ஆரம்­ப­கா­லத்தில் ஒவ்­வொரு தோட்ட பகு­தி­க­ளிலும் வேலைத்­த­ளங்­களை சுத்­தப்­ப­டுத்­து­வ­தெற்­கெ­னவும், குளவிக் கூடு­களை அகற்­றவும் சில தொழி­லா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள் . ஆனால் கடந்த காலங்­களில்  கிளை­போசல்  கிரு­மி­நா­சி­னிகள் தடை­ப­டுத்­தப்­பட்ட பின்னர் தோட்­டங்­களை சுத்­தப்­ப­டுத்­து­வதில் கம்­ப­னிகள் ஆர்வம் காட்­ட­வில்லை.  தொழி­லா­ளர்­க­ளுக்கு இரட்­டிப்பு வேலைப் பளு  என்­பதால் அவர்­க­ளாலும் தோட்­டங்­களை பரா­ம­ரிக்க முடி­யாத நிலை. இதனால் தான் குள­விக்­கூ­டுகள் ,  பாம்பு, சிறுத்தை உள்­ளிட்ட பிரச்­சி­னை­களும் எழுந்­துள்­ளன.   இதை தீர்ப்­ப­தற்­கான வழி வகைகள் குறித்து கம்­ப­னி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம். ஆனால் இன்னும் இந்த விட­யங்கள் தொடர்பில் ஒரு தீர்க்­க­மான முடி­வுகள் எடுக்­கப்­பட முடி­யாத நிலையே உள்­ளது. ஆகவே எதிர்­வரும் காலங்­களில் இந்த விடயம் தொடர்பில் கம்­ப­னி­க­ளுடன் கலந்­தா­லோ­சித்து ஒரு தீர்க்­க­மான முடிவை எடுக்­க­வுள்ளோம்.அத்­தோடு மேற்­கூ­றிய வழி­களில் தொழில்­பு­ரியும் வேளை ஏதா­வது அனர்த்­தங்கள் நிகழ்ந்து தொழி­லாளர் ஓய்­வெ­டுக்க வேண்­டு­மென வைத்­தியர் பரிந்­து­ரைப்­பா­ராயின் குறித்த தொழி­லா­ளிக்கு கொடுப்­ப­ன­வுடன் விடு­முறை வழங்கும் சரத்து கூட்டு ஒப்­பந்­தத்தில் உள்­ளது. கூட்டு ஒப்­பந்தம் என்­பது வெறு­மனே சம்­பள பிரச்­சி­னை­களை மாத்­திரம் பிர­தா­னப்­ப­டுத்­தாது, தொழி­லா­ளர்­களின் இத­ர­செ­யற்­பா­டுகள் மற்றும் நிவா­ர­ணங்கள் தொடர்­பான சரத்­து­க­ளையும் கொண்­டுள்­ளது.

கேள்வி அபி­வி­ருத்­தி­க­ளையும் தாண்டி ட்ரஸ்ட் நிறு­வனம் முன்­னெ­டுத்­து­வரும் வேறு செயற்­பா­டுகள் என்ன ?

 பதில்:  மலை­யகப் பகு­தி­களில் வழங்­கப்­பட்ட நிலங்­க­ளுக்­கான காணி உரித்­து­களைப் பெற்றுக் கொடுக்கும் நட­வ­டிக்­கையை காணி சீர்­தி­ருத்த ஆணைக்­கு­ழு­வுடன்  இணைந்து முன்­னெ­டுத்து வரு­கிறோம்.  அதேபோல் தொழில்­துறை தலை­மைத்­துவ செயற்­பா­டு­களில் பெண்­க­ளுக்­கான பங்­கு­பற்றல் வீதம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஒரு தோட்­டத்தில்    தொழி­லாளர் குடும்­பங்­க­ளி­லி­ருந்து  தகைமை   உள்ள மூன்று பேருக்கு உத்­தி­யோ­கத்தர் வாய்ப்­பு­களை தோட்ட நிர்­வா­கங்கள் வழங்க வேண்டும் . இது கட்­டா­ய­மா­ன­தாகும். ஆனால் அதை பல கம்­ப­னிகள் முன்­னெ­டுப்­ப­தில்லை. அது குறித்து கவனம் செலுத்தி வரு­கின்றோம்.

கேள்வி: கூட்டு ஒப்­பந்தம் தொழி­லா­ளர்­க­ளுக்கு சாத­க­மா­னதா ? ஆயிரம் ரூபா கொடுப்­ப­னவு கிடைக்குமா?

பதில்: அதில் என்ன சந்தேகம் உள்ளது?  தொழிலாளர்களுக்கு  மேலதிக கொடுப்பனவுகளை வழங்கி அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டிய வேலை  கம்பனிகளுடையது. அதன் மூலமே  தொழிலாளர்கள் பற்றாக்குறை   பிரச்சினையை தீர்க்க முடியும். அதேவேளை இதர கொடுப்பனவு முறை ஒன்றை நடை முறைபடுத்தக்கோரிய எமது வேண்டுகோள் கம்பனிகளால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தோடு ஒவ்வொரு தொழிலாளிக்கும் 2 இலிருந்து 5 ஏக்கர் வரையான தேயிலை பயிர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு கம்பனிகளூடாக மானியவிலை உற்பத்திப்பொருட்கள் கொடுக்கப்படுமாயின் தொழிலாளியின் குடும்பத்திற்கு ஒரு மேலதிக வருவாய் முறை உருவாக்கப்படும் என்பதையும் கோரிவருகின்றோம்.  அத்தோடு இதுவே ஒப்பந்தமுறை அடிப்படையில் கிடைக்கப்பெறுமாயின் குடும்பத்திலுள்ள எவரும்  பயனை அனுபவிக்கலாம் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த செயற்திட்டங்களுக்கு கம்பனிகள் முன்வருமானால் தரிசு நில பயன்பாடுகள் அதிகரிப்பதோடு, தேயிலைதொழில் துறையும் ஒரு சீரான வளர்ச்சியை நோக்கி செல்லுமென்பதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்  இது ஒரு உந்துதலாக இருக்கும்.

- நேர்காணல்: எஸ்.லோகேஷ்வரன்