இந்தியாவின் திருத்தப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் புதுடில்லியின் ஜாவ்ரபாத் மவுஜ்பூர் பகுதியில் இளைஞர் ஒருவர் நடுவீதியில் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் நிலைமையை மேலும் பதட்டமானதாக்கியுள்ளது.

ஜாவ்ரபாத் மவுஜ்பூர் வீதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் காவல்துறையினரின் மீது கைத்துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்.இதன் பின்னர் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையினரின் கண்ணீர்புகைபிரயோகமும் இடம்பெற்ற பகுதியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இன்றும் இந்த பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காவல்துறையினர் இன்றும் கண்ணீர் புகைபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.