வடக்கில் பொன் அணிகள் போர்

24 Feb, 2020 | 02:48 PM
image

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை கடந்த  2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மாத்திரம் நடைபெற்றது.

இவ்வருடம் 2020 இல் 103 ஆவது வருட இரு நாள் போட்டியும் 28 ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 திகதி மாரச் மாதம் இடம்பெறவுள்ளது.

       யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி  

அத்துடன் யாழ் மாவட்டத்திலே முதல் முறையாக இருபதுக்கு -20 கிரிக்கெட்போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி மார்ச்  மாதம் சென். பற்றிக்ஸ் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி திருமகன், யாழ்ப்பாணக்  கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும் முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 32 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு போட்டி இரத்துச் செய்யப்பட்டது. மிகுதிப் போட்டிகளின்  விபரம் கிடைக்கப்பெறவில்லை.ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 20 தடவைகள் சென் .பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பிலிப் ஐவன் றொசாந்தனும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் ஆ. சிந்துஜனும் தலைமை தாங்குகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறவுள்ள இரு நாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இரு கல்லூரி அணி கிரிக்கெட் வீரர்களும் தத்தமது திறமைகளை வெளிக்கொணர்வார்கள் என்பது நிச்சயம்.வடக்கில் பொன் அணிகள் போர்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி  

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை கடந்த  2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மாத்திரம் நடைபெற்றது.

இவ்வருடம் 2020 இல் 103 ஆவது வருட இரு நாள் போட்டியும் 28 ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 திகதி மாரச் மாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் யாழ் மாவட்டத்திலே முதல் முறையாக இருபதுக்கு -20 கிரிக்கெட்போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி மார்ச்  மாதம் சென். பற்றிக்ஸ் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி திருமகன், யாழ்ப்பாணக்  கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும் முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 32 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு போட்டி இரத்துச் செய்யப்பட்டது. மிகுதிப் போட்டிகளின்  விபரம் கிடைக்கப்பெறவில்லை.ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 20 தடவைகள் சென் .பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பிலிப் ஐவன் றொசாந்தனும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் ஆ. சிந்துஜனும் தலைமை தாங்குகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறவுள்ள இரு நாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இரு கல்லூரி அணி கிரிக்கெட் வீரர்களும் தத்தமது திறமைகளை வெளிக்கொணர்வார்கள் என்பது நிச்சயம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35