அவுஸ்திரேலியா,தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் முக்கோண ஒருநாள் கிரிக்கட் தொடரில், நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா 139 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

இதன்படி,போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க 50 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 343 ஓட்டங்களைப் பெற்றது. இதில் தென்னாபிரிக்கா அணி சார்பாக ஹசிம் அம்லா 110 ஓட்டங்களையும் , குயின்டன்  டி கொக் 71 ஓட்டங்களையும் மற்றும் டூபிளஸிஸ் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் பெற்றனர்.

344 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 38 ஓவர்களில் 204 ஓட்டங்களைப் பெற்று, சகல விக்கட்டுகளையும் இழந்து, 138 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இப்போட்டியில்  7 விக்கட்டுக்களை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாயீர்,  ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.