பல்கலைக்கழக கற்கை நெறிகளை  பகிடிவதையின் காரணமாக இடையில் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு மீளவும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக் கொடுக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய சிபார்சுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


அந்தவகையில், இக்குழுவிற்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்கப்பிக்கமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக உயர்கல்வியை கைவிட்டுச் சென்ற மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.