அமெரிக்க ஜனாதிபதி தனது மனைவி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்  ஒன்றை மேற்கொண்டு இன்று காலை இந்தியாவை வந்தடைந்ததுள்ளார்.

இவர்களுடன் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா டிரம்பும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். 

அகமதாபாத் விமான நிலையத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றுள்ளார்.

தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 150 அடி நீளமுள்ள சிவப்பு கம்பளத்தில் இருபுறமும்  இசையுடன் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோதேரா மைதானத்திற்கு செல்லும் அவர் அங்கு மக்கள் முன்னிலையில் உரையாற்றவுள்ளார்.