பிவிதுறு ஹெலோ உறுமயவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சிறப்பு விசாரணை பிரிவில் இன்று (16) ஆஜரானர்.

இன்று காலை 9 மணியளவில் உதய கம்மன்பில சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு பிரசன்னமாகியிருந்தார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சட்டவிரோதமாக பங்குகளை விற்பனை செய்தார் என்ற குற்றம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (15) சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்கு உதய கம்மன்பில அழைக்கப்பட்டிருந்த போதிலும் சுகயீனம் காரணமாக அவர் சமுகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.