கொத்மலை நீர்த்தேக்கம் பகுதியில் மிதந்து கொண்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் சடலமொன்று மீட்கப்பட்டது.  

இந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸாருக்கு தொலைபேசியூடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் புகையிரத கடவைக்கு அருகிலுள்ள பாலத்திற்கு அருகாமையில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சில தினங்களாக சடலம் நீரில் கிடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நுவரெலியா  நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை  செய்ததையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.