ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகினாலும் அது வலுவாகவே இருக்கும் ; சி.வி.கே.சிவஞானம்

Published By: Digital Desk 4

24 Feb, 2020 | 11:57 AM
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசு விலகினாலும் அது வலுவாகவே இருக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தாம் தேசியத்தை காப்பாற்றுகின்றோம் என தென்னிலங்கை மக்களுக்கு படம் காட்டுவதற்காகவே கோத்தபாய அரசு தேர்தல் நாடகத்தை முன்னெடுத்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 43 கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை அரசு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவதாக கூறியுள்ளமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை அரசும் அதனைநிறைவேற்றுவதாக இணை அனுசரணை வழங்கியிருந்தது. மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் சர்வதேச நீதி விசாரணை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளைத் தீர்த்தல் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வுக காணல், போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. 

நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அட்சிபீடம் ஏறிய கோத்தாபய அரசு இந்தத் தீர்மானத்தை தாம் நிராகரிப்பதாகவும் அதிலிருந்து விலகுவதாகவும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பாரிய பாதிப்புக்கள் எதனையும் ஏற்படுத்தாது ஏனெனில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல உறுப்பு நாடுகளின் அனுசரணையுடனேயே நிறைவேற்றப்பட்டது.

இதில் இலங்கை அரசு விலகுவதாகக்கூறுவது ஒரு சிறு பகுதி மட்டமே ஏனைய உறுப்பு நாடுகளின் வலுவான அனுசரணை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும் எனவே குறித்த தீர்மானம் முழுமையான திருப்தியை தராது விட்டாலும் சர்வதேச வலுவுடையதாகவே இருக்கும் ஆனால் கோத்தாபய அரசு தேர்தல்களை இலக்காகக் கொண்டு சிங்கள தேசத்திற்கு மாயைக் காட்டுக்கின்றன. தென்னிலங்கை மக்களுக்கு தேசிய வாதத்தை பேசி படம் காட்டுவதற்காகவே 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

எனவே இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும் அந்தத் தீர்மானம் தொடர்ச்சியாகவே இருந்துகொண்டே இருக்கும் அரசுவிலகுவதால் பாதிப்பு மிகக் குறைவு என்றே நான் கருதுகின்றேன்.இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் பிடியில் தொடர்ச்சியாகவே இருந்துகொண்டே இருக்கும் எனத்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:37:41
news-image

அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை...

2025-03-16 09:20:32
news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-16 09:16:46
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-16 09:15:54
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-16 09:13:26
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55