சர்வதேசம் கூறப்போகும் பதில் என்ன?

Published By: J.G.Stephan

24 Feb, 2020 | 11:55 AM
image

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனிவா நேரப்­படி காலை 9 மணிக்கு ஆரம்­ப­மா­க­வி­ருக்­கின்ற நிலையில் அர­சாங்கம் 30/1 பிரே­ர­ணை­யி­லி­ருந்து விலகப் போவ­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நாளை மறு­தினம் புதன்­கி­ழமை அறி­விக்­க­வி­ருக்­கி­றது.

இந்த அறி­விப்­புடன் அடுத்த கட்­ட­மாக என்ன நடக்கும் என்­பதும் அர­சாங்­கத்தின் இந்த நகர்வு தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடு­களும் சர்­வ­தேச சமூ­கமும் என்ன பதி­ல­ளிக்கப் போகி­ன்றன என்­பதே இன்­றைய நிலையில் மிக முக்­கிய விட­ய­மாக ஆரா­யப்­ப­டு­கி­றது.

அர­சாங்கத் தரப்­பினர், தமிழர் தரப்­பினர், பாதிக்­கப்­பட்ட மக்கள், சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­க­ளின்­ பி­ர­தி­நி­திகள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என பல்­வேறு தரப்­பினரும் ஜெனி­வா­வுக்கு வரு­கை­ தந்­துள்ள நிலையில் இவ்­வாறு சர்­வ­தேச சமூ­கத்தின் பதில் தொடர்­பாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

முதல்நாள் உரைகள்
இன்­றைய தினம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­னதும் முத­லா­வ­தாக பேர­வையின் தலைவர் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார். அதன் பின்னர் ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் அன்­ரோ­னியோ குட்ரஸ் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார். அதனைத் தொடர்ந்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார். அதன் பின்னர் பொது­வான மனித உரிமை தொடர்­பான தலைப்பில் விவாதம் நடை­பெ­ற­வி­ருக்­கி­றது. இதில் மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் கலந்துகொண்டு உரை­யாற்­ற­வுள்­ளன.

அமைச்சர் தினேஷின் அறி­விப்பு
அத­ன­டிப்­ப­டை­யி­லேயே எதிர்­வரும் 26 ஆம் திகதி புதன்­கி­ழமை இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன உரை­யாற்­ற­வி­ருக்­கிறார். ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் அமர்வின்போது முதல் மூன்று நாட்­களில் பொது­வான தலைப்பில் விவாதம் நடை­பெறும். அதில் சர்­வ­தேச நாடு­களின் அமைச்­சர்கள் மட்ட பிர­தி­நி­திகள் உரை­யாற்­று­வது வழக்­க­மாகும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே புதன்­கி­ழமை அமைச்சர் தினேஷ் குண­வர்­தன உரை­யாற்­ற­வி­ருக்­கிறார். அதன்­போது இலங்கை அர­சாங்கம் ஜெனிவா பிரே­­ர­ணை­யான 30/1 யோச­னை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அமைச்சர் தினேஷ் குண­வர்­தன உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அமைச்­சரின் அறி­விப்பு பேர­வையில் உறுப்பு நாடுகள் மத்­தியில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அந்­த­வ­கை­யி­லேயே இலங்கை அர­சாங்­கத்தின் அறி­விப்­புக்கு மனித உரிமைப் பேர­வையும் உறுப்பு நாடு­களும் என்ன பதில் கூறப்­போ­கின்­றன என்­பது முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. கடந்த 2015 ஆம் ஆண்டு முன்­னைய இலங்கை அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இந்த 30/1 என்ற பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அதில் 20 பரிந்­து­ரைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. மிக முக்­கி­ய­மாக யுத்­தத்தின்போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக விரி­வான சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்றும் அந்த விசா­ரணைப் பொறி­மு­றையில் பொது­ந­ல­வாய வெளி­நாட்டு நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும்  பரிந்­து­ரைகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

அதே­போன்று காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண காணா­மற்­போனோர் குறித்த அலு­வ­லகம் ஒன்று அமைக்­கப்­பட வேண்டும் என்றும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­காக இழப்­பீட்டு அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டு அர­சியல் கைதிகள் பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்டும் என்றும் யுத்­தத்தின்போது பொது­மக்­க­ளிடமிருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் எனவும் பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அது­மட்­டு­மன்றி அதி­காரப் பகிர்வின் அடிப்­ப­டையில் இலங்­கை­யின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­பட வேண்டும் என்­பதும் மிக முக்­கி­ய­மான பரிந்­து­ரை­யாக 30/1 என்ற பிரே­ர­ணையில் இடம்­பெற்­றி­ருந்­தது.

ஐந்து வரு­டங்­களில் நடந்­தது என்ன?
2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 2 ஆம் திகதி ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்த பிரே­ரணை 2017 ஆம்  ஆண்டு மார்ச் மாதத்­துக்குள் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதா­வது இந்தப் பிரே­ர­ணைக்கு அப்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­மையே அப்­போதைய சூழலில் திருப்­பு­மு­னை­யாக காணப்­பட்­டது. காரணம் அதற்கு முன்னர் நிறை­வேற்­றப்­பட்ட அனைத்துப் பிரே­ர­ணை­க­ளையும் பத­வி­யி­லி­ருந்த அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருந்­தது. இந்தப் பின்­ன­ணி­ய­ிலேயே 30/1 என்ற பிரே­ரணை முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. ஆனாலும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்­போது 30/1 என்ற பிரே­ரணை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதனால் மீண்டும் 34/1 என்ற தலைப்பில் திருத்தப் பிரே­ரணை மீண்டும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது. அதன்­படி 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்­போது இந்தப் பிரே­ரணை அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. எனினும் அக்­கா­லப்­ப­கு­தி­யிலும் பிரே­ரணை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. காணாமல் போனோர் அலு­வ­லகம் மட்டும் நிறுவப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் முழு­மை­யான நம்­பிக்கை இருக்­க­வில்லை என்­பதுடன் பாரிய விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

34/1 என்ற தலைப்பில் மீள் புதுப்­பிக்­கப்­பட்ட ஜெனிவா பிரே­ரணை 2019 ஆம்  ஆண்டு வரையில் அமுல்­ப­டுத்­தப்­ப­டா­மை­யினால் மீண்டும் 40/1 என்ற தலைப்பில் மீண்டும் 2 வரு­டங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டையில் 2021 ஆம் ஆண்டுவரை இந்தப் பிரே­ரணை அமுலில் இருக்கும் எனக்­கூ­றப்­பட்­டது. இந்தச் சூழ­லி­லேயே புதி­தாக ஆட்­சிக்கு வந்த தற்­போ­தைய அர­சாங்கம் பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது. 30/1 என்ற பிரே­ரணை ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­படும் என சர்­வ­தேச சமூகம் எதிர்­பார்த்­தது. ஐக்­கிய நாடுகள் சபையில் நம்­பிக்கை வைத்­தது. எனினும் தற்­போது எந்­த­வி­த­மான பரிந்­து­ரை­களும் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் பிரே­ர­ணையிலிருந்து வில­கு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது. அத­னா­லேயே அர­சாங்­கத்தின் இந்த அறி­விப்பு தொடர்பில் சர்­வ­தேச நாடு­களும்  ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையும் என்ன கூறப்­போ­கின்­றன என்­பது முக்­கி­யத்­து­வம்­மிக்­க­தாக அமை­கின்­றது.

ஆணை­யா­ளரின் புதிய அறிக்கை
இதே­வேளை கடந்த புதன்­கி­ழமை இலங்கை தொடர்­பான அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்சல் பச்லெட் வெளி­யிட்­டி­ருந்தார். அதில் அவர் கீழ் வரும் முக்­கிய  விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

அமை­தி­யான சமூ­கத்தை உரு­வாக்­கவும் அனைத்து  மக்­க­ளுக்கும் நிரந்­தர முன்­னேற்­றத்தை வழங்­கவும் 30/1 என்ற ஐ.நா. பிரே­ர­ணையை  முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  

காணாமல் போனோர்  தொடர்பில் ஆராய நிய­மிக்­கப்­பட்­டுள்ள அலு­வ­ல­கத்­துக்கு சுயா­தீ­னத்­து­வமும்  தேவை­யான வளங்­களும் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சிவில் சமூகம் மற்றும் ஊட­கங்­க­ளுக்­கான  உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.  

மனித உரிமை காப்­பா­ளர்கள் மற்றும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு  எதி­ரான கண்­கா­ணிப்­புக்கள், சித்­தி­ர­வ­தை­க­ள், பழி­வாங்கும் தன்மை போன்ற விட­யங்­களை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு  கோரிக்கை விடுக்­கின்றேன். கடந்­த­கால மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக எந்­த­வி­த­மான பொறுப்­புக்­கூறல் நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலைமை மக்­க­ளுக்கு அர­சா­ங்­கத்தின் மீதான அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும். எனவே  நிலு­வையிலுள்ள  மனித உரிமை மீறல்கள்  தொடர்­பான சம்­ப­வங்கள்  குறித்து விரி­வான சுயா­தீ­னமான பொறுப்­புக்­கூறல் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். நடை­மு­றையிலுள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும்.  அதற்கு பதி­லாக சர்­வ­தேச தரத்­துக்கு அமை­வான சட்­டத்தை கொண்­டு­வ­ரலாம்.

இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 30/1 என்ற பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்பில்   ஐக­்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நெருக்­க­மான கண்­கா­ணிப்பை இலங்கை மீது மேற்­கொள்­ள­வேண்டும். 2015 ஆம் ஆண்டில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை மீளப்­பெ­று­வ­தா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலில் பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும். 30/1 பிரே­ர­ணையை பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்கு நீதியை நிலைநாட்டவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதில் முன்னேற்றத்தை காண முடியவில்லை.  30/1 பிரேரணையில் குறிப்பிட்டுள்ளமைக்கு அமைவாக   மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆராய ஒரு நீதிமன்ற கட்டமைப்பை உருவாக்குவதிலும் முன்னேற்றமில்லை.

சர்வதேசத்தின் பதில் என்ன?

இவ்வாறு பல்வேறு முக்கிய விடயங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ஒரு ஜெனிவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகப் போகிறது. அனைத்துத் தரப்பினரதும் பார்வை தற்போது ஜெனிவாப் பக்கம் திரும்பியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் ஜெனிவாவில் முகாமிடத் தொடங்கியுள்ளனர். பல்வேறு தரப்பினரின் அறிவிப்புக்களும் வெளியாகவிருக்கின்றன. எனவே பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் இம்முறை சர்வதேச மேடையில் எவ்வாறான புதிய நிலைமை ஏற்படப் போகிறது என்பதையும் அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பதில் எவ்வாறு இருக்கும் என்பதையும் வரும் நாட்களில் அறிந்துகொள்ள முடியும்.

- ஜெனீவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன் -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22