கொவிட் 19 கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சீனாவில் இதுவரையில்லாத மிகப் பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் காரணமாக சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இதுவரை 79,561 ஆக பதிவாகியுள்ளதுடன், உயிரழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,619 ஆக உயர்வடைந்துள்ளது.

அதில் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளுக்கு வெளியே 27 இறப்புகள் பதிவாகியுள்ளது. 

சீனாவை அச்சுறுத்தி வரும் கொவிட் 19 வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து ஜனவரி 30 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.