இந்­திய அணிக்­கெ­தி­ரான 2 ஒருநாள் போட்­டி­ க­ளிலும் சிம்­பாப்வே அணி மோச­மான தோல்­வியை சந்­தித்­தது. இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த ரசி­கர்கள் சிம்பாப்வே வீரர்­களை கைது செய்ய வேண்டும் என்று தங்கள் ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ஆபி­ரிக்க கண்­டத்தில் இருந்து சர்­வ­தேச அளவில் கிரிக்கெட் விளை­யா­டு ­வது இரண்டு அணி­களே.

ஒன்று தென்­னா­பி­ரிக்கா மற்­றொன்று சிம்­பாப்வே. தென்­னா­பி­ரிக்க அணி எப்­பொ­ழு­துமே வலு­வான அணி­யாக இருந்து வரு­கி­றது. ஆனால், சிம்­பாப்வே அணி அப்­ப­டி­யல்ல. தற்­போது அந்த அணி பல­வீ­ன­மாக உள்­ளது.

இந்­திய அணி தற்­போது சிம்­பாப்­வேயில் சுற்­றுப்­ப­யணம் செய்து விளை­யாடி வரு­கி­றது. இதன் ஒருநாள் தொடரை சிம்­பாப்வே அணி பரி­தா­ப­க­ர­மாக தோற்­றது.

இதனால் ரசி­கர்கள் கோபம் அடைந்­துள்­ளனர். அவர்கள் மைதா­னத்­திற்கு கொண்டு வந்த பதா­கைகள் மூலம் கடு­மை­யான ஆதங்­கத்தை தெரி­வித்­துள்­ளனர்.

அதில் ஒரு ரசிகர் தன் கையில் வைத்­தி­ருந்த பதா­கையில் சிம்­பாப்வே கிரிக்கெட் வீரர்­களை கட்­டாயம் கைது செய்ய வேண்டும். அவர்கள் தேசத்­து­ரோக குற்­றச்­சாட்டை எதிர்­கொள்ள வேண்டும்” என்று குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் சிலர் ‘‘பேர­ழி­விற்கு எங்களால் ஆதரவு கொடுக்க முடியாது’’ என்றும் ‘‘உங்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு என்னவொரு அவமானம்?’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.