(இரா­ஜ­துரை ஹஷான்)

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் 100 நாட்­க­ளுக்குள் பொய்­யாக்­கப்­பட்­டுள்­ளன. அர­சியல் தேவை­க­ளுக்­காக வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களை  பயன்­ப­டுத்திக் கொள்­வதை அர­சாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இடம்பெற­வுள்ள  பொதுத்­தேர்­தலில் நிச்­சயம் மக்கள் அர­சியல் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வார்கள் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துலால் பண்­டா­ரி­கொட தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு  கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வினர் மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான வாக்­கு­று­தி­களை  வழங்­கி­னார்கள். கடந்த அர­சாங்­கத்தை விமர்­சித்து ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பயனை நாட்டு மக்கள் இன்று  பெற்றுக்கொள்­ள­ வி­ல்லை. ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ  பதவி ஏற்று 100 நாட்கள் கடந்­துள்ள நிலையில்  நடுத்­தர மக்­க­ளுக்கு  எவ்­வித அபி­வி­ருத்­தி­களும் நிவா­ர­ணங்­களும் முன்­னெ­டுக்­க­வில்லை. மாறாக பல நெருக்­க­டிக்கு  மக்கள் உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

ஐக்­கிய தேசியக் கட்சி 2015 ஆம் ஆண்டு ஆட்­சி­ய­மைத்து 100 நாட்களுக் குள் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ரவு இல்­லாமல்  பல அபி­வி­ருத்தி பணி­களை துரி­த­மாக  முன்­னெ­டுத்­தது. அத்­தி­யா­வ­சிய  பொருட்­ களின்  விலை­கு­றைப்பு, அரச ஊழி­யர்­ களின் மாதக் கொடுப்­ப­னவு துறைக்­கேற்ப அதி­க­ரிப்பு, உள்­ளிட்ட  பல­த­ரப்­பட்ட  விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கடந்த அர­சாங்­கத்­தினை விமர்­சித்தே பொது­ஜன பெர­முன ஆட்­சியை கைப்­பற்றிக் கொண்­டது. இன்று  பல மோச­டி­க­ளுடன் கைதுசெய்­யப்­ப­டு­ப­வர்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த  ராஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தில் முக்­கிய பொறுப்பில் இருந்­த­ வர்கள். நீதி­மன்றம் அர­சாங்­கத்தின்  செயற் ­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண் டும் என ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்­ளமை சந்­தே­கத்­தினை தோற்­று­வித்­துள்­ளது.

வேலை­யற்ற  பட்­ட­தா­ரி­களையும் ஒரு இலட்சம் இளை­ஞர்­க­ளையும் அர­சாங்கம் பொதுத்­தேர்­த­லுக்­கான தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு  பயன்­ப­டுத்திக் கொள்­ள­வுள்­ளது.  ஆட்சி  மாற்றம் ஏற்­பட்­ட­வுடன்  12000ற்கும் அதி­க­மான  இளைஞர், யுவ­திகள் தொழில்­வாய்ப்­புக்­களை  இழந்து வீதிக்கு  இறங்கி  போராடும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த அர­சாங்­கத்தை காட்­டிலும்  புதிய அர­சாங்­கத்தில் நன்மைபெற முடியும் என்­பதை கரு­தியே மக்கள் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷவை தெரிவுசெய்தார் கள். ஆனால் இன்று  எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. மக்களின் எதிர் பார்ப்புக்கள் திசைமாறி செல்கின்றன. ஆகவே   பொதுத்தேர்தலில்   சிறந்த  தீர்மா னத்தை எடுத்து நிச்சயம் பெரும்பாலான மக் கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்.