நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் விராட்கோலி சிறப்பாக விளையாடா தது இந்திய ரசிகர்களை பெரிதும் கவலைக்குள்ளாகியுள்ள அதேவேளை டுவிட்டரில் ஸ்மித்தா விராட்கோலியா சிறந்த வீரர் என்ற விவாதம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

முதல் இனிங்சில் சிறப்பாக விளையாடாத விராட்கோலி இரண்டாவது இனிங்சில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் நிலையை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அதிக ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழந்;துள்ளார்.

43 பந்துகளில் 19 ஓட்;டங்களை பெற்றிருந்தவேளை டிரென்ட்போல்ட்டின் பவுன்சரை புல்செய்ய முயன்ற விராட்கோலி விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

விராட்கோலியின் ஆட்டமிழப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை அவர்களின் சமூக ஊடக கருத்துகள் மூலம் புலனாகியுள்ளது.

விராட்கோலி தனது கடந்த பத்து இனிங்ஸ்களில் சதம் பெறாததை ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விராட்கோலியின் மோசமான நிலை தொடர்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள ரசிகர் ஒருவர் இது இந்த தலைமுறையின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரரின் வீழ்ச்சியின் ஆரம்பமா? நான் அவ்வாறே நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

விராட்கோலி மோசமான துடுப்பாட்ட நிலையால் பாதிக்கப்பட்டுள்ளார், அனைத்து வீரர்களிற்கும் இது ஏற்படுவது வழமை, உலக கிண்ணத்திற்கு முன்னர் அவர் வழமைக்கு திரும்புவார் என  எதிர்பார்ப்போம் என மற்றுமொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

விராட்கோலியின்  சொட் அதிர்ச்சிக்குரியது என குறிப்பிட்டுள்ள மற்றுமொரு ரசிகர் நிலைத்து நின்றுவிளையாடவேண்டிய நேரத்தில் தேவையற்ற சொட் என குறிப்பிட்டுள்ளார்.

சச்சினை போல விராட்கோலியும் சிறந்த ஒருநாள் போட்டி துடுப்பாட்ட வீரர்  என பதிவு செய்துள்ள ரசிகர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் விராட்கோலியை விட ஸமித் முன்னிலையில் உள்ளார் இருவருக்கும் இடையில் பெரும் இடைவெளி உள்ளது என பதிவு செய்துள்ளார்.

சிலர் கோலி ஸ்மித்தினை விட டெஸ்டில் சிறந்தவர் என தெரிவிக்கின்றனர், தனது அணி தடுமாறும்போது விராட் கோலி என்ன செய்கின்றார் அவர் சிறந்த ஒருநாள் வீரர் மாத்திரமே என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பந்து சிறிது ஸ்விங் பண்ண தொடங்கினால் மன்னர் விராட்கோலி ஆட்டமிழந்து விடுவார் எனவும், விராட்;கோலி துடுப்பாட்ட வீரர்களிற்கு சாதகமான ஆடுகளத்தில் மாத்திரம் சிறப்பாக விளையாடுவார் , வெளிநாட்டில் தனது அணிக்காக அவர் வெற்றியை பெற்றுக்கொடுத்தது இல்லை,ஸ்மித் எங்கோயே உள்ளார் அவர் எதிர்பாரத தருணங்களில் தனது அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கின்றார் எனவும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.