பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன ?

Published By: J.G.Stephan

24 Feb, 2020 | 10:50 AM
image

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமையும் என்­பதும் அவர்­க­ளுக்கு நீதி எவ்­வாறு கிடைக்­கப்­போ­கி­றது என்­பதும் தற்­போ­தைய சூழலில் ஆரா­யப்­பட்டு வரு­கின்ற மிக முக்­கிய விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ  தலை­மை­யி­லான அர­சாங்கம் 2015ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த 30/1 என்ற பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­துள்ள நிலையில் அது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பை வெ ளி விவ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன 26ஆம் திகதி ஜெனிவா பேர­வையில் இலங்கை சார்பில் உரை­யாற்­றும்­போது வெளி­யி­ட­ வி­ருக்­கிறார்.

இந்­த­ நி­லையில், இலங்கை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக வெளி விவ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன மனித உரிமை பேர­வையில் அறி­வித்­ததும் ஐ.நா. மனித உரி­மை­ ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் எவ்­வா­றான பிர­தி­ப­லிப்பை வெளி­யி­டு­வார்கள் என்­பது தொடர்பில் பாரிய எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமக்கு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி வந்­தனர். 2015ஆம் ஆண்டு வரை ஜெனிவா மனித உரிமை பேர­வையில் பல்­வேறு பிரே­ர­ணைகள் சர்­வ­தேச நாடு­க­ளினால் இலங்கை தொடர்­பாக கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டன. ஆனால் முன்­னைய அர­சாங்கம் அவற்றை ஏற்­றுக்­கொள்ள மாட்டோம் என நிரா­க­ரித்­தி­ருந்­தது. இந்த நிலை­யி­லேயே 2015ஆம் ஆண்டு அப்­போ­தைய இலங்கை அர­சாங்­கத்தின் இணை அனு­சர­ணை­யுடன் இந்த 30/1 என்ற பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தப் பிரே­ர­ணைக்கு முன்­னைய இலங்கை அர­சாங்கம் அனுசரணை வழங்­கி­ய­மையின் கார­ண­மாக அது ஒரு திருப்­பு­மு­னை­யாக காணப்­பட்­டது. இத­னூ­டாக தீர்வு கிடைக்கும் என்றும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­படும் என்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனினும் கடந்த நான்­கரை வரு­டங்­க­ளா­கவே இந்தப் பரிந்­து­ரைகள் பெரி­தாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந்த சூழலில் நவம்பர் மாதம் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இந்தப் பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது. இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள வெளி விவ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன எதிர்­வரும் 26 ஆம் திகதி நான் ஜெனிவா மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் உரை­யாற்­ற­வுள்ளேன். அதா­வது இலங்­கை­யா­னது 30/1 என்ற பிரே­ர­ணை­யி­லி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யே­று­கின்­றது என்­ப­தனை நான்  ஜெனிவா பேர­வையில் அறி­விக்­க­வுள்ளேன். ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேர­வையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையில் இலங்கை அர­சாங்கம் இனி பங்­கு­தாரர்  இல்லை என்­ப­தனை நான் ஜெனி­வாவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வுள்ளேன் என்று தெரி­வித்­தி­ருக்­கிறார். அத்­துடன் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­யா­னது  அர­சி­ய­ல­மைப்­புக்கு விரோ­த­மா­னது. அப்­போது பத­வியில் இருந்த ஜனா­தி­பதி தனக்கு இது குறித்து தெரி­யாது என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.  

மேலும் இந்த பிரே­ர­ணைக்கு   மக்கள் அங்­கீ­கா­ர­ம­ளிக்­க­வு­மில்லை. அதனை பாரா­ளு­மன்­றத்தில்  சமர்ப்­பித்து அங்­கீ­காரம் பெறப்­ப­ட­வு­மில்லை.  எனவே  இது சட்­ட­ வி­ரோ­த­மா­னது என்றும் ஜன­நா­ய­கத்­துக்கு புறம்­பானது எனவும் நான் ஜெனிவா பேர­வையில் அறி­விக்­க­வி­ருக்­கின்றேன் எனவும் வெளி விவ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன கூறி­யி­ருக்­கிறர்.

இதே­வேளை இந்த பிரே­ர­ணைக்கு எதி­ரா­கவே  மக்கள் கடந்த தேர்­தலில் ஆணை வழங்­கினர். எனவே  மக்­களின் அங்­கீ­காரம் 30/1 பிரே­ர­ணைக்கு கிடைக்­க­வில்லை.  எனவே அதி­லி­ருந்து வில­கு­வ­தற்கு தீர்­மா­னித்தோம். என்ன பிரச்­சி­னை­யாக இருந்­தாலும் நாங்கள் உள்­ளக ரீதியில் அதற்­கான வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து செல்வோம் எனவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

அந்­த­வ­கையில் அர­சாங்கம் ஜெனிவா பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது. எனினும் அர­சாங்­கத்தின் அறி­விப்பு ஜெனி­வாவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்ட பின்னரே ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் உறுப்­பு­நா­டு­களின் நிலைப்­பாடு அறி­விக்­கப்­படும். அது எவ்­வா­றான தன்­மை­யுடன் இருக்கும் என்­பதை அர­சாங்கம் அறி­விப்பு விடுக்­கும்­வரை பார்க்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அந்த மக்கள் தமக்­கான நீதியைத் தொடர்ந்து எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு நீதி வழங்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கடந்த 10 வரு­டங்­க­ளாக அந்த மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. இந்­த­நி­லையில் தற்­போது அமுலில் இருக்­கின்ற பிரே­ர­ணை­யி­லி­ருந்தும் அர­சாங்கம் வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. எனினும் ஜெனிவா பிரே­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் வில­கி­னாலும் அந்தப் பிரே­ரணை ஒரு­போதும் செய­லி­ழக்­காது. அர­சாங்கம் வில­கினால் சர்­வ­தேச ரீதி­யி­லான கடும் நெருக்­கடி மற்றும் அழுத்­தங்­களை சந்­திக்க வேண்டி வரும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்கிறார்.

நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­யி­லி­ருந்து ஒருவர் வில­கலாம். அது அவர்­களின் விருப்பம். ஆனால் அந்த வில­க­லா­னது பிரே­ர­ணையை ஒரு­போதும் பாதிக்­காது. அது நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­யா­கவே இருக்கும். ஒரு­போதும் செய­லி­ழக்­காது என்றும் இரா. சம்­பந்தன் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இதே­வேளை இவ்­வா­றா­ன­தொரு செயற்­பாட்டை அர­சாங்கம் செய்யும் என்று நாங்கள் ஏற்­க­னவே சந்­தே­கப்­பட்டோம். அதனால் நான் அண்­மையில் ஜெனிவா சென்­றி­ருந்­த­போது இது தொடர்பில் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தேன். அர­சாங்கம் வில­கினால் எவ்­வா­றான  செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பிலும் நான் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் உரை­யா­டி­யி­ருக்­கிறேன். மாற்று வழிகள் தொடர்­பாக நாம் பேசி­யி­ருக்­கிறோம். இவ்­வா­றான சூழலில் உல­க­ளா­விய நியா­யா­திக்­கத்தை உறுப்பு நாடுகள் இலங்­கைக்கு  அழுத்தம் கொடுப்­ப­தற்­காக பயன்­ப­டுத்த வேண்டும் என்று இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் கூறி­யி­ருக்­கின்றார்.

அர­சாங்கம் இந்தப் பிரே­ர­ணை­யி­லி­ருந்து விலக முடி­யாது. உல­க­ளா­விய நிய­மங்­களில் இலங்­கைக்கு பல பொறுப்­புகள் இருக்­கின்­றன. அவற்­றி­லி­ருந்தும் இலங்கை விலக வேண்டும். அவ்­வா­றாக வில­கினால் இலங்கை கடும் பாதிப்பை சந்­திக்கும். சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு இணைந்து செயற்­ப­ட­வேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்­திரன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

அந்­த­வ­கையில் புதிய அர­சாங்கம் ஜெனிவா பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­மி­டத்து எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை எடுப்­பது என்­பது தொடர்­பாக கூட்­ட­மைப்பு ஆராய்­கி­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்­கான நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் பாரிய வேத­னை­க­ளுக்கு மத்­தி­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­களின் எதிர்­பார்ப்­புகள் நிறை­வேற்­றப்­ப­டா­ம­லுள்­ளன. குறிப்­பாக காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறிய முடி­யாமல் அந்த மக்கள் தவித்து வரு­கின்­றனர். அதே­போன்று பொரு­ளா­தார ரீதி­யிலும் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வார்த்தைகளால் விபரிக்கமுடியாதவைகளாக இருக்கின்றன. எனவே யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் நிறைவடையப்போகின்ற சூழலில் இன்னும் அந்த மக்கள் நீதிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு இந்த மக்கள் வேதனையுடன் காத்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. தமது நாட்டுப் பிரஜைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்து அரசாங்கம் அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும். தற்போது ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பது பாரிய கேள்வியாகவிருக்கிறது. எவ்வாறு இருந்தபோதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி விடயத்தில் இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

(24.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04