புத்தளம் தில்லையடி நிந்தனி பகுதியில் தூக்கிலிட்ட நிலையில், கட்டில் உட்கார்ந்தவாரும் கால்கள் இரண்டும் தரையில் படுகின்ற நிலையிலும் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 

இதனை அவதானித்த வீட்டார் புத்தளம் பொலிசாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைத் தந்து பார்வையிட்ட நிலையில் மரண வைத்தியர் வரவழைக்கப்பட்டார்.

இதன்போது  சடலத்தை பார்வையிட்ட நிலையில் தொடர்பில்  கொலையா தற்கொலையா என பிரேத பரிசோதனையின் பின்னரே கூற முடியும் என மேலும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (23.02.2020) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் 41 வயதுடைய 5 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.