கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நேற்றைய தினம் வரை 79,561 ஆக பதிவாகியுள்ளதுடன், உயிரழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,619 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 11,569 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 25,051 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்றைய தினம் கொரோனா வைரஸால் மேலும் 150 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2,582 ஆக உயர்வடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த உயிரிழப்புகளில் ஒன்றை தவிர ஏனைய அனைத்தும் கெரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது தற்போது 2,619 ஆக உள்ளது, அதில் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளுக்கு வெளியே 27 இறப்புகளும் பதிவாகியுள்ளது. 

வுஹானில் பரவ ஆரம்பித்த கொவிட் 19 என்ற கொரோனா வைரஸானது தற்போது 33 நாடுகளில் பரவியுள்ளது.

1. சீனா: பாதிப்பு - 77,345, உயிரிழப்பு - 2,592

2. தென்கொரியா: பாதிப்பு - 769, உயிரிழப்பு - 07

3. ஜப்பான்: பாதிப்பு - 146+691 (டயமண்ட் பிரின்சஸ்), உயிரிழப்பு - 04

4. இத்தாலி: பாதிப்பு - 157, உயிரிழப்பு - 03

5. சிங்கப்பூர்: பாதிப்பு - 89, 

6. ஹொங்கொங்: பாதிப்பு - 74, உயிரிழப்பு - 02

7. ஈரான்: பாதிப்பு - 43, உயிரிழப்பு - 08

8. தாய்லாந்து: பாதிப்பு - 35

9. அமெரிக்கா: பாதிப்பு - 35

10. தாய்வான் : பாதிப்பு - 28, உயிரிழப்பு - 01

11. அவுஸ்திரேலியா: பாதிப்பு - 22

12. மலேசியா: பாதிப்பு - 22

13. ஜேர்மன்: பாதிப்பு - 16

14. வியட்நாம்: பாதிப்பு - 16

15. பிரிட்டன்: பாதிப்பு - 13

16. டுபாய்: பாதிப்பு - 13

17. பிரான்ஸ்: பாதிப்பு - 12, உயிரிழப்பு - 01

18. கனடா: பாதிப்பு - 10.

19. மாக்கோ: பாதிப்பு - 10

20. பிலிப்பைன்ஸ்: பாதிப்பு - 03

21. இந்தியா: பாதிப்பு - 03

22. இஸ்ரேல்: பாதிப்பு - 02

23. ரஷ்யா: பாதிப்பு - 02

24. ஸ்பெய்ன்: பாதிப்பு - 02

25. பெல்ஜியம்: பாதிப்பு - 01

26. கம்போடியா: பாதிப்பு - 01

27. எகிப்த்: பாதிப்பு - 01

28. பின்லாந்து: பாதிப்பு - 01

29. லெபனான்: பாதிப்பு - 01

30. நேபாள்: பாதிப்பு - 01

31. இலங்கை: பாதிப்பு - 01

32. சுவீடன்: பாதிப்பு - 01

33. ஈராக்: பாதிப்பு - 01

Photo credit : CNN