ஜெனி­வாவில் இன்று ஆரம்­ப­மா­க­வி­ருக்கும் மனித உரி­மைகள் பேர­வையின் 43ஆவது அமர்­வுக்கு முன்­ன­தாக, 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30/1  தீர்­மா­னத்­திற்கு வழங்­கிய இணை அனு­ச­ர­ணையை இலங்கை அர­சாங்கம் திரும்பப் பெறு­வ­தற்­கான தீர்­மானம் குறித்து வெளி­வி­வ­கார செய­லாளர் ரவி­நாத ஆரி­ய­சிங்க மனித உரி­மைகள் பேர­வையின் தலை­வ­ரான தூதுவர் எலி­சபெத் டிச்­சி-­பிஸ்ல்­பெர்­க­ருக்கு  கடந்­த­வாரம் வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்­துள்ளார்.  

இது தொடர்பில் வெளிவி­வ­கார அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது
கடந்த புதன்­கி­ழமை வெளி­நாட்டு உற­வுகள் அமைச்சர் தினேஷ் குண­வர்­தன சமர்ப்­பித்த அமைச்­ச­ரவை விஞ்­ஞா­ப­னத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்­மா­னத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் அளித்­த­தாக தற்­போது ஜெனீ­வாவில் இருக்கும் வெளி­வி­வ­கார செய­லாளர் மனித உரி­மைகள் பேர­வையின் தலை­வ­ரிடம் வெள்­ளிக்­கி­ழமை  தெரி­வித்தார்.


இந்தத் தீர்­மானம் வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்­திலும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. மனித உரி­மைகள் பேர­வையின் 43 வது அமர்­வுக்­கான இலங்கைத் தூதுக்­கு­ழு­விற்கு அமைச்சர் குண­வர்­தன தலைமை தாங்­குவார் என்றும், பெப்­ர­வரி 26 புதன்­கி­ழமை சபையின் உயர் மட்ட அமர்வில் உரை­யாற்­றும்­போது அர­சாங்­கத்தின் இந்தத் தீர்­மா­னத்தை சபையின் உறுப்­பி­னர்­க­ளுக்கு முறை­யாக அறி­விப்பார் என்றும் வெளிவி­வ­கார செயலர்  மேலும்  எடுத்­து­ரைத்தார்.  


பெப்­ர­வரி 27 ஆம் திகதி உயர்ஸ்­தா­னி­கரால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள இலங்கை குறித்த வாய்­மூல தகவல் புதுப்­பித்­தல்­க­ளுக்கு பதிலளிக்கும் அமைச்சர் குணவர்தன, ஜெனீவாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்சலெட்டை சந்திக்கவுள்ளார்.