நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரித்வி சா இரு இனிங்ஸ்களிலும் மோசமாக விளையாடியுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரித்வி சா இரு இனிங்களிலும் 16, 18  ஓட்டங்களையே பெற்ற நிலையில் நியுசிலாந்து ஆடுகளங்களில் விளையாடுவதற்கான துடுப்பாட்ட உத்திகள் அவரிடம் உள்ளனவா என கேள்வி எழுப்பியுள்ள ரசிகர்கள் சுப்மன் கில்லினை அணியில் சேர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பிரித்வி சா இரு இனிங்ஸ்களிலும் தடுமாறியதை சுட்டிக்காட்டியுள்ள ரசிகர் அவரை எப்படி இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்தனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓய்வுநாற்காலி நிபுணர்களும்,முட்டாள்;  வர்ணணையாளர்கள் தெரிவுக்குழுவினரும் மும்பாயின் கிரிகெட் கட்டுப்பாட்டுச்சபையினரும் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பிரித்வி சா விளையாடுவதற்கான காரணமாகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து தொடரில் பிரித்வி சா ஐந்து தடவை துடுப்பெடுத்தாடியுள்ளார் ஆனால் ஒரு தடவை மாத்திரமே 30 ஓட்டங்களிற்கு மேல் பெற்றுள்ளார் என ரசிகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிங் பந்துகளிற்கு எதிரான தனது துடுப்பாட்ட உத்தியை பிரித்வி சா வலுப்படுத்தவேண்டும்,பந்து அதிகளவிற்கு சுவிங் ஆகும் ஆடுகளங்களில்  அவரால் ஓட்டங்களை பெற முடியாது என ரசிகர் ஒருவர் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இந்திய துணைக்கண்ட ஆடுகளங்களில் மாத்திரம் பிரித்வி சாவினால் ஓட்டங்களை பெற முடியும் என அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.