கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக ஈரானிலிருந்து தனது நாட்டிற்கு வருகை தரும் அனைத்து கப்பல்களுக்கும் குவைத் அரசாங்கம் இன்று முதல் காலவரையின்றி தடை விதித்துள்ளது.

இந்த தீர்மானமானது ஷூய்பா, தோஹா மற்றும் ஷுவைக் துறைமுகங்களை உள்ளடக்கியது என குவைத் துறைமுக ஆணையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவால் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பகுதி இதுவென குவைத் துறைமுக ஆணையகத்தின் தலைவர் ஷேக் யூசப் அப்துல்லா அல் சபா தெரிவித்தார்.

இதேவேளை ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக குவைத் ஏயர்வேஸ் வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

ஈரானில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo credit : CNN