(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தோம். என்றாலும் அரசாங்கம் கணக்கறிக்கையை சமர்ப்பிக்காமல் வாபஸ் பெற்றுக்கொண்டது. மாறாக நாங்கள் தோற்கடிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி கண்டி வாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கடன் செலுத்துவதற்கும்  மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருந்து இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்க மறுத்ததாக அரசாங்கத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் பனிப்போர் இடம்பெற்றுவருகின்றது. அதனை மறைப்பதற்கே எங்களை குறைகூறி வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.