ஈரானில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்தமாக அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது 43 ஆக உயர்வடைந்துள்ளது.

அது மாத்திரமல்லாது இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி எட்டுப் உயிரிழந்துள்ளதாகவும் ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஐ எட்டியுள்ளது, 

இது நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 100 க்கு மேல் தள்ளக்கூடும் என்று பிராந்திய தலைவர் அட்டிலியோ ஃபோண்டானா இன்று தெரிவித்தார்.

Photo Credit : Sputnik