தென்கிழக்கு துருக்கியின் ஈரான் எல்லைப் பகுதியில் இன்று  5.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Rescuers and residents search through rubble to find those trapped (picture-alliance/AA/N. Hazar)

இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் 8 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களையும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களையும் மீட்கும் பணிகளில் மீட்பு படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.