கம்­போ­டி­யாவில் 1970களில் 'க்மெய்ர் ரூஷ்' எனப்­படும் போல் பாட் தலை­மை­யி­லான கம்­யூனிஸ்ட் கட்­சி­யி­னரின் சர்­வா­தி­கார ஆட்­சி­யின்­போது இறந்­து­விட்­ட­தாக நினைத்து வாழ்ந்து வந்த இரு சகோ­த­ரிகள் 47 ஆண்டு­க­ளுக்கு பின்னர் தற்­போது இணைந்துள்ளனர்.  

98 வய­தான பன் சென் என்­ப­வரும் 101 வய­தான பன்சியா என்ற இரு சகோ­த­ரி­க­ளுமே இவ்­வாறு இணைந்­துள்­ளனர்.  அதே போல் பன் சென், இறந்து­விட்­ட­தாக நினைத்­தி­ருந்த 92 வய­தான  இளைய சகோ­த­ரனும் இவர்களுடன் ஒன்று சேர்ந்­துள்ளார். 

குடும்­பத்தை பிரிந்த சில ஆண்­டு­களில், தனது கண­வரை இழந்த பன் சென், கம்­போ­டிய தலை­ந­க­ர­மான ப்னோம் பென்னில் உள்ள பெரும் குப்பை கழி­வு­க­ளுக்கு அருகே உள்ள ஒரு சிறு பகு­திக்கு இடம்பெயர்ந்துள்ளார்.குப்­பைகள் சேக­ரிப்­பது, கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்­களை விற்­பது மற்றும் அப்­ப­கு­தியில் இருக்கும் குழந்தை­களை பார்த்துக் கொள்­வது என தன் வாழ்க்­கையை கழித்து வந்துள்ளார்.

1973ஆம் ஆண்­டி­லேயே இரு சகோ­த­ரி­களும் இறு­தி­யாக சந்­தித்­துள்­ளனர். இந்நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இவர்கள் சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.