சீன நகரமான வுஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஜாங்னான் வைத்தியசாலை வட்டாரங்கள் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

29 வயதான சியா சிசி என்ற குறித்த வைத்தியர் கடந்த 19 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந் நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த வேளையில் அவர் 2020 பெப்ரவரி 23 அதிகாலை வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலையில் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை 3,000 க்கும் மேற்பட்ட வைத்திய ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.