(எம்.மனோசித்ரா)

கிரிந்திவௌ - போமலுவ , நிதன்கும்புர பிரதேசத்தில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடமிருந்து 3, 37, 500 மில்லி லீற்றர் ( 450 போத்தல்கள் ) மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

கிரிந்திவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கிரிந்திவௌ, போமலுவ, மதுபானம்