கடன்தொகை உச்ச எல்லையை அதிகரிக்க எதிர்க் கட்சியிடம் ஒத்துழைப்பை கோரும் அரசாங்கம்!

Published By: Vishnu

23 Feb, 2020 | 02:34 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்கள் மீது எதிர்க்கட்சிக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால் கடன்தொகை உச்ச எல்லையை அதிகரிக்க பாராளுமன்றத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

கடந்த ஆண்டு 2380 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால் 4550 பில்லியன் ரூபாய் அரச செலவாகக் கணிப்பிட்டிருக்கிறது. எனவே வரவிற்கும அதிகமாக செலவு கணிப்பிடப்பட்டுள்ளமை கடன்பெற்றுக் கொள்வதற்காகவேயாகும். கடன் பெறாமல் எந்தவொரு அரசாங்கமும் செயற்படவில்லை. நாளொன்றுக்கான அரச செலவு சுமார் 12.5 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. மாதமொன்றுக்கு அரசாங்கத்தைக் கொண்டு செல்ல 379 ( 37900 கோடி ) பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. 

எனினும் அந்தளவுக்கு வருமானம் கிடைப்பதில்லை. எனவே மேலதிக கடனைப் பெற்றே நாட்டைக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆனால் பாராளுமன்றம் இதற்கு அனுமதியளிக்கவில்லை. எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பின் பிரகாரம் மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதிக்குக் கிடைக்கப் பெறும் அதிகாரங்களைக் கொண்டு அரசாங்கத்தை செயற்படுத்திச் செல்வதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. 

எனவே ரணில் விக்கிக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கோ உண்மையில் மக்கள் மீது அக்கறையிருந்தால் அவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரி கணக்கறிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30