பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக 24 இலங்கை மீனவர்களை பங்களாதேஷ் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் பயணித்த 4 மீன்பிடி படகுகளையும் பங்களாதேஷ் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பங்களாதேசத்தின் தென்கிழக்கில் உள்ள  துறைமுக நகரமான சிட்டகொங் கடற்பரப்பில் வைத்தே குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 24 பேரும் நேற்றிரவு படேங்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.