"ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசு விலகுவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல": உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்கிறார் சம்பந்தன்

Published By: J.G.Stephan

23 Feb, 2020 | 10:35 AM
image

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் முழுமையாக விலகுவதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. பல்வேறு அசௌகரியங்களுக்கு அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.  

மனித உரிமைகள், மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட சம்பந்தன் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி ரீதியாக ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து முழுமையாக இலங்கை அரசாங்கம் விலகிக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அறிவிப்புக்களைச் செய்துள்ள நிலையில் அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அத்துடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் இந்த அறிவிப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி ஜெனீவா அமர்வில் நேரடியாக கலந்து கொண்டு வெளியிடவுள்ளார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆணைபெற்ற தரப்பாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது என்பது தொடர்பில் வினவியபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் விலகுகின்றமையானது ஆச்சரியமளிக்கும் விடயமொன்று அல்ல. 2009 இன் பின்னரான காலத்தில, இறுதிப்போரின் போது மனித உரிமைகள் மனிதாபிமானச் சட்டமீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த தருணத்தில் தற்போதைய ஆட்சியாளர்களே அன்றும் ஆட்சிப்பீடத்தில் இருந்தார்கள். 

அக்காலத்தில் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தபோதும் கூட அதனைப் பொருட்டாக கருதி பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருந்திருக்கவில்லை. அதன் காரணமாகவே ஜெனீவா அரங்கில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றும் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தன. இதனால் பல்வேறு நெருக்கடிகளை அந்த ஆட்சியாளர்கள் சந்தித்திருந்தனர். 

பின்னர் 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்படவும் அந்த ஆட்சியாளர்களும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தார்கள். ஆனால் அவர்களிடத்தில் பொறுப்புக்கூறலை நடைமுறைச்சாத்தியமாக்கும் வல்லமை இருந்திருக்கவில்லை. 

காலஅவகாசத்தினைப் பெற்றுக்கொண்ட போதும் அவர்களால் நடைமுறையில் எவ்விதமான முன்னேற்றங்களையும் வெளிப்படுத்த முடியாதவொரு நிலைமையிலேயே இருந்து வந்தார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் ஆட்சிப்பீடமேறிய ராஜபக்ஷ தரப்பினர் பிரேரணையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்கள். 

இதனால் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீதான சர்வதேச அபிமானம் குறைவதோடு நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகும் நிலைமைகளே உருவாகவுள்ளன. அத்துடன் இந்த செயற்பாடு நாட்டக்கு நல்லதல்ல. எதிர்காலத்தில் அரசாங்கமும், நாடும் மதிப்பிளந்து அசௌகரியங்களுக்குச் செல்லும் சூழலே உருவாகவுள்ளன. 

உம்மைப்பொறுத்தவரையில் நாம் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஆதனைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேச சமுகத்தினரின் பணி காத்திரமாக அமைய வேண்டும். அதேநேரம் அரசாங்கம் தீர்மானத்திலிருந்து விலகினால் அடுத்த கட்டமாக அடுத்த கட்டம் நோக்கி நாம் சிந்திக்க வேண்டியேற்பட்டுள்ளது.  ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் மத்தியில் ஆராய்ந்து அடுத்த கட்ட செயற்பாடுகளை வெளிப்படுத்துவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24