பிலியந்தல, தெல்தர பகுதியில் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 500 கிராம் ஹெரோயின் மீட்கபட்டுள்ளது என்றும் குறித்த ஹெரோயினின் மொத்தப் பெறுமதி 6 மில்லியன் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகைளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.