புதிய கொறோனாவைரஸ் பரவல் நெருக்கடி தொடர்பில் இராஜதந்திர ரீதியில் கயிற்றில் நடப்பதைப் போன்று செயற்படவேண்டியிருக்கிறது.வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சீனா எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் உலகின் ஏனைய பாகங்களுக்கு தொற்று பரவுவதை தாமதப்படுத்தியிருக்கின்றன.

அதேவேளை சீனாவின் நடத்தை மனித உரிமைகளை அவமதிக்கின்ற அதன் இயல்பான போக்கின் வழியிலேயே அமைந்திருக்கின்றன என்று சீனாவை குறைகாண்பவர்கள் கூறுகிறார்கள். இவர்களுக்கும் சீனாவுக்கும் இடையில் அகப்பட்டிருக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் கழைக்கூத்தாடி போன்று நடந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் அதானொம் கபிறியேசஸ் ஒவ்வொரு செய்தியாளர் மகாநாட்டிலும் குறிப்பாக அமெரிக்க செயதியாளர்களிடமிருந்து அடிக்கடி வருகின்ற சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு மத்தியில் வைரஸ் பரவலை சீனா கையாளுகின்ற முறையை நியாயப்படுத்தியிருக்கிறார். சர்வதேச அக்கறைக்குரிய பொதுச்சுகாதார அவசரநிலையை ஜனவரி இறுதியில் பிரகடனப்படுத்தியபோது உலகின் ஏனைய பாகங்களைப் பாதுகாக்கான்றமைக்காக சீனாவை பாராட்டினார்.முதலில் சீனாவிடமிருந்து வந்ததாக கருதப்படும் நெருக்குதலின் காரணமாக அந்த அவசரநிலையைப் பிரகடனம் செய்வதை ரெட்றோஸ்ஒருவாரகாலத்துக்கு தாமதித்தார்.

ரூஙரழவ் முன்னர் அறியப்பட்டிராத நோய்க்கிருமியொன்று தோற்றம் பெற்றிருப்பதை கடந்த சில வாரங்களாக நாம் காண்கின்றோம்.அது அதன் பரவல் முன்னென்றும் இல்லாத வகையில் தீவிரமாக பரவியிருக்கிறது. அந்த பரவலுக்கு எதிராக முன்னென்றும் இல்லாத வகையிலான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த கிருமி சீனாமீது கடுமையான சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு  எடுத்திருக்கும் அதிவிசேடமான நடவடிக்கைகளுக்காக சீனாவை பாராட்டியாகவேண்டும் என்று கூறியிருந்தார்.

அதே போன்றே சீனாவின் நேச நாடான கம்போடியாவையும் ரெட்றோஸ் மனதாரப் பாராட்டினார்.வேறு துறைமுகங்களில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட எம்.எஸ்.வெஸ்ரெர்டாம் என்ற சுற்றுலா கப்பலை தனது துறைமுகத்தில் தரித்துநிற்க கம்போடியா அனுமதித்தது“நாம் இடையறாது கோருகின்ற சர்வதேச ஒத்துழைப்புக்கு இது ஒரு நல்ல உதாரணமாகும்.இத்தகைய தொற்றுநோய்ப் பரவல்களினால் மனிதர்களில் உள்ள சிறந்தவற்றையும் மோசமானவற்றையும் வெளிக்கொணர முடியும்” என்று ரெட்றோஸ் கூறினார்.

அதேவேளைஇ கொறோனாவைரஸ் பரவல் ஆபத்து மிகவும் உயர்வாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறித்து தாய்வான் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றது. சீனா அளவுக்கு தாய்வானும் ஆபத்தானதாக இருப்பதாக தரப்படுத்தப்பட்டதால்இ மற்றைய நாடுகள் அதன் மீதும் அதன் பிரஜைகள் மீதும் தடைகளை விதிக்கின்ற நிலைமை தோன்றியிருக்கிறது.தாய்வானில ஆக 22 பேருக்கே தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், சீனாவில் 72,400 க்கும் அதிகமானோர் தொற்றுக்கு இலக்காகியிருக்கிறார்கள்.ரூஙரழவ் துறைசார் பண்புடனும் நடுநிலையாஙவும் நடந்துகொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்திடம் நாம் வேண்கோள் விடுக்கின்றோம்.சீனாவின் நியாயமற்ற கூற்றில் இருந்து விலகி நில்லுங்கள்.சீனாவினால் கடத்திச்செல்லப்டாதீர்கள் ரூஙரழவ் என்று தாய்வான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜோன் ஓவ் கூறினார்.

தாய்வானை தனது பிராந்தியத்தி்ன் ஒரு பகுதியென்று கருதும் அதை சீனா உலக சுகாதார ஸ்தாபனத்தில் சுயாதீனமான உறுப்புரிமையைப் பெறுவதற்கு தாய்வான் செய்த முயற்சிகளை நீண்டகாலமாக தடுத்துவருகின்றது.

வைரஸ் பரவலைக் கையாளுவதில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. அதனால் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்ற போதிலும், உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைவரத்தை பயன்படுத்தி இரு நாடுகளுமே ஒன்றுக்கு மேலாக மற்றது அனுகூலமடைய முயற்சிக்கின்றன.

ஜனவரி 29 ரெட்றோஸ் சீனாவுக்கு விஜயம் செய்து ஜனாதிபதி சீ ஜின் பிங்கை சந்தித்த போது அவர் உலக சுகாதார ஸ்தாபனத்துடனான ஒத்துழைப்புக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பதாக சீன வெளியுறவு அமைச்சு கூறியது. ரூசூ39;சீனாவின் நடவடிக்கைகள் அதன் மக்களை மாத்திரமல்லஇ முழு உலகிலும் உள்ள மக்களையும் பாதுகாக்கின்றனரூசூ39 என்றும் அது கூறியது. ஆனால்இ ரெட்றோஸ் சீனாவின் அரசியல் ஆட்சியை ஆதரிப்பதாகவும் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

மிகவும் பரந்தளவில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் உயர் வேகத்தை மெச்சிய ரெட்றோஸ் சீனாவின் ஆட்சி முறையின் அனுகூலங்களையும் பயனுறுதியுடைய தன்மையையும் அதன் தற்போதைய செயற்பாடுகள் வெளிக்காட்டுவதாகவும் வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறது.

அதேவேளைஇ தற்போதைய சுகாதார நெருக்கடி நிலை அமெரிக்க பொருளாதாரத்துக்கு உதவும் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பேர் றொஸ் கூறினார். இது ஒரு துரதிஷ்டவசமான நோய் என்று ரூசூ39 பொக்ஸ் பிஸ்னஸ் நியூஸ்ரூசூ39; செய்திச் சேவையில் குறிப்பிட்ட அவர் வட அமெரிக்காவுக்கு தொழில் வாய்ப்புக்கள் மீண்டும் திரும்புவதை துரிதப்படுத்துவதற்கு இந்த நிலவரம் உதவும் என்று தான் கருதுவதாகவும் கூறினார்.

சீனாவிலிருந்து வருகின்றவர்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய இராச்சியமும் ஐரோப்பிய நாடுகளும் எடுத்திருக்கின்ற அதேவேளை அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கின்ற எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜையும் அவர்கள் வருவதற்கு முன்னரான 14 நாட்களுக்குள் சீனாவுக்கு சென்றிருந்தால் அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

பழைய உலக வல்லரசுகளும் புதிய வல்லரசுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு முட்டிமோதிக் கொள்வதை  இந்த வைரஸ் தொற்று நிலைவரம் மேலும் தெளிவாக வெளிக்காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்புக்களைப் பொறுத்தவரை ஏனைய சில அமைப்புக்களை விட உலக சுகாதார ஸ்தாபனம் கூடுதலானளவு ஜனநாயகத் தன்மை கொண்டது. அந்த ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டில் ஒவ்வொரு நாட்டுக்கும் சமத்துவமான வாக்கு இருக்கிறது.

ஆனால் இதற்கு மாறாக உலக வங்கியின் தலைவர் எப்பொழுதுமே ஒரு அமெரிக்கராகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எப்போதுமே ஒரு ஐரோப்பியராகவும் இருக்கும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக சுகாதார ஸ்தாபனம் சீனா தலைமை தாங்கிய ஒரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும். ரெட்றோஸிக்கு முன்னர் அதன் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த மார்கரட் ஷான் ஒரு சீனர். அவர் முன்னர் ஹொங்கொங்கில் சுகாதாரப் பணிப்பாளராகப் பதவி வகித்தார். ஆனால் சீனா அதனுடன் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை. கடந்த வருடம் ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நடந்த போட்டியில் அமெரிக்காவிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் சீனா வெற்றி பெற்றது.

கொறோனா வைரஸ் பரவலை சீனா கையாளுகின்ற முறையை நியாயப்படுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது பெய்ஜிங் அழுத்தத்தை பிரயோகித்து வருகிறது என்றால் இதே போன்ற அழுத்தத்தை ஐ.நா நிறுவனங்கள் முன்னேறிய பொருளாதார நாடுகளிடமிருந்து எப்போதுமே எதிர்கொண்டு வந்திருக்கிறன என்று உலக சுகாதார பாதுகாப்பு தொடர்பான சதாம் ஷவுஸ் நிலையத்தின் பணிப்பாளரான ஒஸ்மான் டார் கூறினார். தற்போது கொறோனா (கோவிட் - 19) வைரஸ் பரவலை சீனா கையாளுகின்ற முறை உலக சுகாதார ஸ்தாபனத்தையும் அஉலகளாவிய பொதுச்சுகாதார நிபுணர்களையும் ஒரு திரிசங்கு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஏனென்றால் ஒரு அளவுக்கு அது பயன்தந்திருக்கிறது போல் தோன்றுகிறது.

நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை தடுத்து வைக்கும் நடவடிக்கைகள் கடந்த காலத்துக்குரியவை. அத்தகைய தடுத்து வைப்புக்களை நடைமுறைச் சாத்தியமானவையாக இனிமேலும் கருதமுடியாது. ஏனென்றால் நாம் பெருமளவு தனிநபர் சுயாட்சி மற்றும் பாரிய போக்குவரத்து தொடர்புகளுடனான ஜனநாயக சமூகங்களில் வாழ்கின்றோம் என்று கூறிய டார் இந்த நிலைவரம் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு இன்னொரு இடர்பாட்டைக் கொடுக்கிறது. ஆனால்இ சீனா விரைவாகவும் முழுமையான வகையிலும் செயற்பட்டது

எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் பழைய எண்ணங்களை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஏனென்றால் கொறோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்களை ஒரு மாகாணத்துக்குள் கட்டுப்படுத்தி வைத்ததன் மூலம் ஏனைய உலக நாடுகள் துரிதமாக தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கால அவகாசத்தை வழங்கியது.

பெருமளவு மக்களை ஒரு சமூகத்திற்குள் அல்லது நகரத்திற்குள் தடுத்து வைப்பதை எப்போது செய்வது? மனிதாபிமான முறையில் எப்படிச் செய்வது? என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட வேண்டியிருக்கும். மக்களின் உரிமைகளை சமநிலைப்படுத்தக் கூடியதாக சமூகப் பொறுப்புணர்வுடன் இதை எவ்வாறு கையாளுவது என்ற பாடத்தையும் படிக்க வேண்டியிருக்கிறது. கொறோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளுவதில் சீனா கடைப்பிடிக்கின்ற இந்த அணுகுமுறைகளில் இருந்து பெருமளவு படிப்பினைகள் வெளிவரும் என்று டார் கூறினார்.

(த கார்டியன் சுகாதார விவகார ஆசிரியர் சாரா போஸ்லே எழுதியது)