கல்கிசை பேக்கரி சந்தியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று மாலை 5 மணியளவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் ,80 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றபட்டதாக கல்கிசை பொலிசார் தெரிவித்தனர். 

கல்கிசை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.