திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இச் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம் 10ம் கொலனியை சேர்ந்த 50 வயதுடைய நபர்  எனவும் தெரியவருகின்றது. 

சம்பவம் குறித்து தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.