(செ.தேன்மொழி)

களுத்துறை வடக்கு பகுதியில் ஹெரோயின் மற்றும் சட்டவிரோத போதை வில்லைகளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகஸ் சந்தியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 24,27 ஆகிய வயதுடைய இளைஞர்களிருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் நிறுத்தி சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து மூன்று கிராம் ஹெரோயினும் , 2300 போதை வில்லைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் , நாளைய தினம் களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.