தடுமாறிய இலங்கை அணியை தனித்து நின்று போராடி வெற்றி பெறச் செய்தார் ஹசரங்க!

Published By: Digital Desk 4

23 Feb, 2020 | 07:38 AM
image

அவிஷ்க மற்றும் திமுத்தின் வலுவான ஆரம்பம் மற்றும் ஹசரங்கவின் பொறுப்பான துடுப்பாட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியை இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷெய் ஹோப் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 140 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடங்கலாக 115 ஓட்டங்களையும் சுனில் அம்ரிஷ் 3 ஓட்டங்களையும், டரன் பிராவோ 39 ஓட்டங்களையும், ரோஸ்டன் சேஸ் 41 ஓட்டங்களையும், நிகோலஷ் பூரண் 11 ஓட்டங்களையும் கிரான் பெல்லார்ட் 09 ஓட்டங்களையும், ஜேசன் ஹொல்டர் 12 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க கீமோ போல் 32 ஓட்டங்களுடனும், ஹெய்டன் வேல்ஸ் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் இசுறு உதான 3 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப், திசார பெரேரா  ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

290 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 49.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.

இங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

அதன்படி அவிஷ்க பெர்னாண்டோ 50 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய குசல் பெரேரா 42 ஓட்டங்களுடனும், குசல் மெண்டீஸ் 20 ஓட்டங்களுடனும், அஞ்சலோ மெத்தியூஸ் 5 ஓட்டங்களுடனும், தனஞ்சய டிசில்வா 18 ஓட்டங்களுடனும், திசர பெரேரா 32 ஓட்டங்களுடனும், உதான டக்கவுட்டுடனும், சந்தகன் 3 ஓட்டங்களுடனும்  ஆட்டமிழக்க, அணியின் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்ட வனிந்த ஹசரங்க 43 ஓட்டங்களுடனும் நுவான் பிரதீப் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுக்களையும், கீமோ போல் 2 விக்கெட்டுக்களையும், ஹெய்டன் வெல்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஜோசன் ஹொல்டர் ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியுடானான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43