இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் தோல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவது அதிகம். அதிலும் பிறவியிலேயே மரபணு குறைபாட்டின் காரணமாக தோல் சார்ந்த நோயால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இத்தகைய தோல் சோர்ந்த குறைபாட்டிற்கு, தோல் சிகிச்சை நிபுணரை அணுகி அவர் பரிந்துரைக்கும் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, சிகிச்சை பெற வேண்டும். 

ஏனெனில் இவ்வுலகில் தோல், முடி, நகம் ஆகிய மூன்றும் ஒவ்வொருக்கும் பிரத்யேகமானது. இந்நிலையில் Ichthyosis Bullosa என்ற பாதிப்புக்கு தற்போது சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பிறவியில் ஏற்படும் தோல் சார்ந்த நோய்கள் குணப்படுத்தக் கூடியவை. அதே தருணத்தில் பிறவி தோல் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஐந்து சதவீத அளவிற்கு அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. 

நெருங்கிய உறவுகளில் திருமணம், பேறுகாலத்தின்போது தாய்மார்களுக்கு ஏற்படும் மன இறுக்கம் அல்லது மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு என பல காரணங்களால் பிறவி தோல் நோய்கள் ஏற்படுகின்றன. இதனை கருவிலேயே கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய நவீன சிகிச்சைகள் தற்போது அறிமுகமாகி இருக்கின்றன.

Ichthyosis Bullosa என்ற பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பிறவிலேயே உடல் முழுவதும் தோல் வறண்டு, உலர்ந்து, செதில் செதிலாக உதிரும். இதற்கு Ichthyosis என்ற குரோமோசோம் என்ற மரபணு குறைபாடு காரணமாகிறது. மன வேதனையையும், அவலட்சணமான தோற்றத்தையும் தரக்கூடிய இத்தகைய பாதிப்பிற்கு விற்றமின் ஏ வினை அடிப்படையாகக் கொண்ட நவீன மருந்துகள் மூலம் இதற்கு முழுமையான நிவாரணமளிக்கலாம். 

டொக்டர் தீப்தி.

தொகுப்பு அனுஷா.