( மயூரன் )
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கக் கோரி யாழ். ஊடக அமையத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றமேற்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில், முன்னணி சகோதர ஊடக செயற்பாட்டாளர் பெடி கமகே தாக்கப்பட்டமை அச்சத்தை தருவதாக அமைந்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டில் சக ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் படுகொலை, தமிழ் தரப்பினில் 41 பேரை காவு கொண்டுள்ளது.
இதில் காணாமற்போன பலர் குறித்து தகவல்கள் இல்லை. காணாமற்போனவர்கள் பற்றி, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பற்றி பல முறைப்பாடுகள் தங்கள் அலுவலகத்துக்கு கிடைத்திருந்தன.
இவை தொடர்பில் விசாரணைகள் ஏதுமின்றி கிடப்பினில் போடப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்முடன் இணைந்து செயற்படும் சக ஊடகவியலாளர் பெடி கமகே அரசியல் பின்னணியில், பணியின் போது கொலை செய்யும் நோக்குடன் தாக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிர்தப்பியுள்ளார்.
முகவர்களான இரண்டு சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு முகவர்கள் அகப்படுவதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதுமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ள போதும், பின்னணியில் இருக்கும் பெரிய தலைகள் கைதாவதில்லை.
தற்போதைய சூழலிலும் அரசியல் பின்னணியில் சூத்திரதாரிகள் தப்பித்துக்கொள்ள அரசாங்கம் அனுமதியளிக்கக்கூடாது.
படுகொலையான மற்றும் காணாமற்போன எமது சகோதர ஊடகவியலாளர்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாம் கோரும் அதேவேளை, சகோதர ஊடகவியலாளர் பெடி கமகே படுகொலை முயற்சி சூத்திரதாரிகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டிப்பதுடன், பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த கோருகின்றோம்” என அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM