விஷால் படத்திலிருந்து விலகிய மிஷ்கின்

Published By: Digital Desk 4

22 Feb, 2020 | 04:42 PM
image

விஷால் நடிப்பில் தயாராகிவரும் ‘துப்பறிவாளன் 2’ படத்திலிருந்து அதன் இயக்குனர் மிஷ்கின் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ என்ற படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியிருந்தார். வரிசையாக தோல்வி படங்களை கொடுத்திருந்த விஷாலுக்கு ‘துப்பறிவாளன்’ படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோலாகலமாக லண்டனில் தொடங்கியது. இந்தப்படத்தில் விஷாலுடன் நடிகர் பிரசன்னா, ரகுமான், கௌதமி ஆகியோர் நடித்திருந்தார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்தார். 

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிவடைந்தது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் தயாரிப்பாளரும் கதையின் நாயகனுமான விஷாலுக்கும், இயக்குனர் மிஷ்கினுக்குமிடையே ஊதிய விவகாரத்தில் கருத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்திலிருந்து விலகுவதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்திருக்கிறார். இதனால் படத்தினை தொடர்ந்து இயக்கி, திட்டமிட்டபடி படத்தை வெளியிட விஷால் தீர்மானித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை, நடிகர் சங்கத்தில் பிரச்சனை, தன்னுடைய சொந்தப் படத்தில் இயக்குனருடனான பிரச்சனை, திருமண நிச்சயதார்த்தம் தடைப்பட்டதால் சொந்த வாழ்க்கையிலும் பிரச்சினை, அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தை வெளியிட்டு நஷ்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்களிடம் பிரச்சனை என பிரச்சினைக்கு மேல் பிரச்சனையை உருவாக்கி கொண்டு தவித்து வரும் விஷாலுக்கு, ரசிகர்கள் மட்டுமே பலம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right