நாட்டில் சில பகுதிகளில், பொதுமக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மாவட்ட ரீதியில் நடமாடும் சேவைகளை முன்னெடுப்பதற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் முதற்கட்டமாக,  பதுளை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நடமாடும் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக ஆணைக்குழவின் தலைவர் நிலந்த விஜயசிங்க தெரிவித்துள்ளார்.காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு கொண்டுள்ள காணிகளில் குடியிருப்பவர்களுக்கு உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமும் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.