எம்பிலிபிட்டிய இரத்தினபுரி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார். எம்பிலிபிட்ட்டிய நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் போதிமழுவ பிரதேசத்தில் பாதசாரியொருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பாதசாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்  பின்னர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். 

விபத்தில் எம்பிலிபிட்ட்டிய பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயங்களுக்குளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிசார்  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.