கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தொகை 433 ஆக அதிகரித்துள்ளது என தெரிவி;த்துள்ள தென்கொரியா அதிகாரிகள் மருத்துவமனை மற்றும் தேவாலயமொன்றிலிருந்தே வைரஸ் பரவ ஆரம்பித்தது எனவும் தெரிவித்துள்ளனர் 

தென்கொரிய தலைநகரிற்கு அருகில் உள்ள டேகு நகரத்திலிருந்தே வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

டேகு நகரத்தை சேர்ந்த 61 வயது பெண்ணின் மூலமோ கொரோனா வைரஸ் பரவியுள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் சர்ச்சைக்குரிய சின்சியோன்சி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபாட்டுச்சென்றவர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சனிக்கிழமை புதிதாக நோய்த்தாக்கத்திற்குள்ளாகியவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 92 பேர் டேகுவிற்கு அருகில் உள்ள சியோங் டேனம் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனநோயளிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர்ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியை விசேட நிர்வாக வலயமாக அறிவித்துள்ள அரசாங்கம் நோயாளிகளிற்கு போதியளவு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட தேவாலயத்திற்கு சமீபத்தில் வழிபாட்டிற்கு சென்ற 9000 பேரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவத்தற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

இவர்களில் 1261 பேர் தங்களிற்கு இருமல் உட்பட ஏனைய பாதிப்புகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர் என அதிகாரிகள்குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் நால்வர் சீனா உட்பட வெளிநாடுகளிற்கு சென்றுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளார் என முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் தேவாலயத்திலும் உணவகங்களிலும் மருத்துவமனையிலும் 1160 பேருடன் தொடர்புகொண்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்விபத்தொன்றில் சிக்கி இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இவரே வைரஸ்பரவக்காரணமாகயிருக்கமாட்டார், அந்த பகுதியில் வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர் என கண்டுபிடிக்கப்பட்ட முதல் நபராக இவர் இருக்கலாம் என அதிகாரிக்ள தெரிவித்துள்ளனர்.